எதிர்பார்ப்பு Expectancy 52-0817A 1.நன்றி சகோதரன் பாக்ஸ்டர் அவர்களே, ஆமாம் ஐயா. மதிய வணக்கம், நண்பர்களே. தென் ஆப்ரிக்காவிலிருந்து வந்திருக்கும் திரு ஜாக்சன் அவர்களின் கலக்கலான செய்தியை கேட்க நான் இங்கே இருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. நான் இங்கே வந்தவுடன், அந்த திரைக்கு பின்னால் அடியெடுத்து வைக்கும் போது எனக்கு _ அதை கேட்க விருப்பமாக இருந்தது. நான் அந்த குழந்தைக்கு பிரதிஷ்டை செய்வதற்கு மிகவும் தாமதமாக வந்துவிட்டேன் என்று நான் நினைகிறேன், அனால் நான்.......சகோதரன் பாக்ஸ்டர், சில ஜனங்களுக்காக ஜெபிக்கும் படி சில குறிப்புகளை கொடுத்திருந்தார். நேற்று இரவு தேவன் நமக்கு செய்ததற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்த விரும்புகிறோம். அவர் நேற்று இரவு செய்தார். அவர் அற்புதமானவர், மேலும் அது நிஜமாகவே மிகவும் அபரிதமான அற்புதம் என்று நான் நம்புகிறேன். மேலும், சகோதரன் போஸ்வொர்த் அவர்களை மீண்டும் சந்திப்பது எனக்கு சந்தோஷமாக உள்ளது. உங்களுக்கு தெரியுமா நாங்கள், அவரையும் அவர் மகனை பற்றியும் நேற்று இரவு பேசிக் கொண்டிருந்தோம். மேலும் சகோதரன் போஸ்வொர்த் எங்களுக்கு முன்னதாகவே, தென் ஆப்ரிக்காவிற்கு செல்ல வேண்டும் என்று வழி நடத்தப்படுகிறார் என்று உணருகிறார். அவர் சரியாக கீழே அவர்களோடு நேரே சென்று, அங்கு எல்லா முன் ஏற்பாடுகளை செய்து, மேலும் சில ஆராதனைகளை கேப் டவுன் (Cape Town), போர்ட் எலிசபத் (Port Elizabeth), கிரஹாம் ஸ்டவுன் (Grahamstown) களேர் _ களேர்க்ஸ் டர்ப் (klerksdorp) அல்லது _ நான் சரியாக உச்சரித்தேன் என்று நம்புகிறேன்: களர்க்ஸ்டாஃப், மற்றும் பிளோம்பான்டின் (Bloemfontein) மற்றும் அந்த நகரத்தின் பகுதியில் செய்வேன். மேலும் நாங்கள் கீழே வருவதற்கு சற்று முன்னதாக...........தேவன் எனக்கு......அந்த காட்சியை வெளி படுத்தியதை தொடர்ந்து டர்பனுக்கு (Durban) திரும்பி, மேலும் அங்கிருந்து பம்பாய் (Bombay) அல்லது இந்தியாவில் வேறு எங்கே யாவது செல்வோம். மேலும், நான் உங்களிடம் சொன்னதை நினைவு கூறுங்கள். நேற்று மாலை தேவன் எனக்கு கொடுத்த அந்த வெளிப் பாடானது அதே விதமாக நடக்கிறதா இல்லையா என்பதை பாருங்கள். 2. இப்போது, இந்த மதியம் நீங்கள் அளித்த அந்த நன்கொடைக்காக மிகவும் நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் பாக்ஸ்டர் அதை எப்படி செய்யவேண்டும் என்று அறிந்ததால் அதை மிகவும் நேர்த்தியாக செய்தார். நாங்கள் பணத்திற்கு பிச்சை எடுப்பதில்லை. இல்லை........எனக்கு பிச்சை எடுக்க ஒரு நிர்வாகி தேவை இல்லை. நாங்கள் வரும் நேரத்தில், கூட்டங்கள் பணத்தை செலுத்த முடியவில்லை என்றால், எனக்கு வீட்டிற்கு செல்ல சரியான நேரம் என்று உணர்ந்துக் கொள்வேன். நாங்கள் அதில் நம்பிக்கை கொள்வதில்லை. நிதி பற்றாக்குறை இருந்துகொண்டு இருக்கும் போது, என்னுடைய அநேக சகோதரர்களும், பத்திரிக்கைகளும் திருத்தம் செய்தார்கள், ஆனால் அதை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. கூட்டங்களை நடத்துவதற்கு நிதி அவசியம், ஆனால் சுயமாக யாருமே _ கூட்டங்களுக்கு கொடுத்ததில்லை. மற்றும் எங்களுக்கு..........மற்றும் எனக்கு........அன்பினிமித்தம் அவர்கள் கொடுக்கும் காணிக்கைகளை அநேக நேரங்களில் காணிக்கை பெட்டியில் கொட்டிவிடுகிறேன். அவை எல்லாம் எனக்கு சாப்பிடுவதற்காக அல்ல .......ஜனங்கள் எனக்கு என்னுடைய உடைகளை கொடுக்கிறார்கள் . மற்றும் எனக்கு தேவை இல்லாத பணம் அயல் நாட்டு ஊழியத்திற்காக செலவிடப்படுகிறது. மற்றும் தேவன் எனக்கு தந்த அவர் பணியின் நலனுக்காக உழைப்பவன் என்று, எனக்கு தெரியும். மற்றும் நான் நானே, தேவன் தந்த செய்தியை அறிவிப்பேன், ஆகையால் அந்த நாளில் தேவனுடைய பங்கை சரியாக செய்து முடித்தேன் என்று அறிவேன். மற்றும் நீங்கள்........ 3. சில சமயங்களில் நாங்கள் ஒரு பட்டணத்திற்கு செல்வோம், மற்றும் பல ஸ்தாபனங்கள் நடத்தும்படி விடுவோம், மேலும் அது போல காரியங்களை செய்வோம். மேலும் அவர்கள் எங்களை "பரிசுத்த உருளையர்கள் என்றும், தெய்வீக சுகமளிப்பவர்கள்." என்று கூறும் வரையிலும் அங்கிருந்து புறப்படமாட்டோம். மற்றும் ஒரு விசை, நான் ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்திற்கு கொடுத்தேன், மற்றும் நான் பார்த்த போது, ஒரு மனிதன், வீதி வழியாக ஒரு காடிலாக் (Cadillac car) வண்டியில், ஒரு பெரிய சிகரட்டோடு, வைர மோதிரம் அணிந்து, ஆறு அல்லது ஏழு நூறு டாலர்களை ஒரு மாதத்திற்கு சம்பாத்தியம் பண்ணக்கூடியவனாக இருந்து, அப்படி பணத்தை பிரித்து தருபனுக்கு சுவிசேஷம் எடுத்து செல்லமாட்டேன்..........நல்லது, அது சரி அல்ல. பசி பட்டினியால் வாடும் ஏழை சிறு குழந்தைகளுக்கு எடுத்து செல்வேன். ......மற்றும் எனக்கு ஒன்று மட்டும் தெரியும், சகோதரன் ஜாக்சன் கூறியது போல சுவிசேஷத்தை கேள்விபடாத, இயேசுவை பற்றி ஒன்றுமே அறியாத அந்த பாரம்பரிய மக்களுக்கு.......இல்லை. சுவிசேஷத்தை அவர்களுக்கு எடுத்து செல்வது தான் என் உள்ளத்தில் உள்ளது. மற்றும் பொதுவான கட்டளை என்னவென்றால், "நீங்கள் சென்று உலகத்தில் உள்ள ஒவ்வொரு சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்." மற்றும் அதற்கு தான் இந்த நன்கொடை மற்றும் பெற்றுக்கொள்ளும் எல்லா பணமும். நான் உபயோகிக்காத ஒவ்வொரு பணமும், சரியான நிதி சேரும் வரைக்கும், சேமிக்கப்படும். அதற்கு பின் நாங்கள் ஸ்வீடன் நாட்டிற்கோ அல்லது தேவன் எங்கு வழி காட்டுகிறாரோ அங்கு செல்வோம். 4. இப்பொழுது நாங்கள் தென் ஆப்ரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் செல்ல காத்திருக்கிறோம். நமது தேவன் வரக்கூடிய அந்த மகத்தான நாளில், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழும்பும் போது, சாவுக்கேதுவான இந்த சரீரம் சாவாமையை தரித்துகொண்டு, அவர் முன்பாக நின்று ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தருக்கு மகுடம் சூட்டும் போது, இந்த மதியம் இங்கிருக்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஒரு காசு உண்டியில் போட்டிருந்தாலும், அது உங்களுக்கு ஆயிர மடங்கு இந்த ஜீவியத்தில் பெருகி, வரப்போகிற உலகத்தில் நித்திய ஜீவனும் அளிப்பதாக. தேவன் உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் என் ஜெபம். மற்றும் நன்றியோடு, அவருடைய நிதி நலனுக்காக உழைக்கும் பணியாளராக, என்னால் இயன்ற வரைக்கும், எனக்கு தெரிந்த மட்டில் சிறந்ததை செய்து, எப்படி அதை தேவனுக்கு முன்பாகவும், உங்களுக்கு முன்பாகவும் பயபக்தியுடன் வைக்க தெரியும். எவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு போதுமான அளவு கிடைக்குமோ ......எங்களுக்கு அதிகம் தேவை இல்லை, ஏனென்றால் எங்களுக்கு.........அது அதிக அழுத்தத்தை உண்டாக்கும், அதினால் எப்படி கூட்டங்களை நடத்துவோம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஆனால் நாங்கள் கீழே சென்று காணிக்கையை எடுப்போம். எவ்வளவு வருமோ அது சரியாக இருக்கும். பாருங்கள். 5. இப்போது, நான் சொன்னதுபோல சகோதரன் போஸ்வர்த் எங்களுக்கு முன்பே சென்றுவிடுவார். கர்த்தர் வழிநடத்துவார் என்று அவர் உணர்ந்ததால், அவர் எங்களுக்கு முன்கூட்டியே சென்று நாங்கள் வரவிருக்கும் டர்பன் வரைக்கும் உள்ள சிறிய நகரங்களை ஆயத்தப்படுத்துவார். சகோதரன் போஸ்வேர்த் செல்லும் போது அவருக்காக ஜெபியுங்கள். மற்றும் தேவன் எப்பொழுது என்னை அனுப்புவார் என்பதை பற்றி எனக்கு தெரியாது, ஆனால் நான் போவேன் என்பது எனக்கு தெரியும். நேற்று இரவு அந்த காட்சியை பற்றி சொன்னது நினைவிருக்கிறதா. தேவன் என்னை அங்கு அனுப்புவதால் நான் கண்டிப்பாக அங்கு செல்வேன். சுவிஷேசத்தை பிரசங்கிப்பதற்கு, என்னால் இயன்ற வரை சிறந்ததை செய்வேன். மற்றும் சகோதரன் போஸ்வேர்த் ஒரு நல்ல, நல்ல ஆசிரியர் என்று எனக்கு தெரியும், மேலும் அவருக்கு என்ன செய்ய வேண்டுமோ அல்லது தேவன் அவரை என்ன செய்ய வேண்டும் என்று இருக்கிறாரோ, அதை அவர் நன்றாக செய்வார். அது விசித்திரமாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா, ஏனென்றால் அவர் சரியாக இங்கேயே நின்றுக் கொண்டு, உங்களிடம் பேசுவதாக நான் பார்க்கிறேன். தேவனுடைய தூதன் அருகில் இருக்கிறார், மற்றும் ஒரு பெண் வயிற்று பிரச்சனையினால் சுகம் பெற்றதை பார்த்தேன், சரியாக இங்கேயே, இப்பொழுதே இந்த கூட்டத்தில் நான் பார்த்தேன். அது சரிதானே. அது சரிதானே? உங்களுக்கு கிடைத்தது, அப்படித்தானே? அது சரிதானே? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நல்லது. நீங்கள் அதில் இருந்து இப்போது சுகம் பெற்றுவிட்டீர்கள். நீங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் போதே சுகம் அடைந்தீர்கள். ஓ, அவர் எனக்கு காண்பித்ததை, நான் அநேக முறை பேசலாம். ஆனால் நான், சற்று அந்த ஏழை பெண்மணி உட்கார்ந்து கொண்டு இருந்ததை பார்த்தேன். நான் சுற்றி பார்த்த போது அவள் மிகவும் ஆர்வமாக இருந்தாள். நான் பணத்தை பயபக்தியாய் அங்கே எடுத்து செல்வேன் என்று, அதுபோல பேசிய போது அவள் தலையை அசைத்தாள், ஏதோ....... அவளுக்கு எப்படியோ தெரிந்திருக்கும். எனக்கு தெரியாது. மற்றும் அவள் மிகவும் நேர்மையாக இருந்தாள். நான் சுற்றி பார்க்கும் போது ஒரு மேசை அவள் முன்பாக நகர்ந்தது, அவள் பின்புறமாக இப்படி நகர்ந்தாள். அது வயிற்று பிரச்சனை என்று எனக்கு தெரியும். மீண்டும் நான் திரும்பி பார்த்த போது அவள் உணவை அருந்தி கொண்டிருத்தாள். அவள் சுகம் பெற்றாள் என்று எனக்கு தெரிந்ததால், அவளிடம் சொல்லலாமே என்றிருந்தேன். அது சரி தானே, ஆகையால்....... 6. இதோ ஒரு அருமையான நபருக்கு சற்று முன்பு.........நடந்தது. அவருடைய சகோதரன் சென்ற விமானம் ஆபத்துக்குள்ளாகி அவர் மரித்துப் போனார். அது பென்னும் பிளாரன்ஸ் ஸ்மித்தும் (Ben and Florence Smith) மற்றும் இதோ - இங்கே இன்னும் ஒன்று இருக்கிறது: "மருத்துவமனையில் இருக்கும் ஒரு மனிதருக்கு சகோதரன் பிரன்ஹாம் விசேஷித்த ஜெபம் ஏரெடுக்க வேண்டுகோல் மற்றும்.....?..... அவர் வெறும் 42 வயது தான். எல்லாம் சரி நாம் எல்லாரும் நம்முடைய தலைகளை வணங்குவோம், மற்றும் அவர் இங்கே இருக்கும்போதே இவர்களுக்காக ஜெபிப்போம். பரலோகத்தின் பிதாவே_இந்த மதியம் நீர் கீழே இந்த பீடத்தின் கீழ் இருக்கும் மனிதர்களை நீங்கள் பார்க்கும் போது, விமானத்தில் உயிர் இழந்த மனிதனால் துக்கித்து கொண்டிருக்கிற அந்த குடும்பத்தை நோக்கி பார்க்கும்படி ஜெபிக்கிறேன். தேவனில் அன்பு கூறுகிறவர்களுக்கு எல்லாம் நன்மைகேதுவாய் நடக்கிறது. அவருடைய ஆத்மா உம்மோடு சரியாக இருக்கும் என்பதை நாங்கள் நம்பி, மற்றும் இன்றைய தினத்தில் அவர் திரும்ப வேண்டும் என்றிருந்தால், அவர் திரும்ப மாட்டார் என்பதை அறிகிறோம். அவர் ஒரு வேலை வேண்டி இருப்பார் என்றால், தனது விருப்பதிற்கு எங்கு இருக்க விரும்புகிறாரோ அங்கே இருப்பார். அவர் இரட்சிக்கப் பட்டிருக்கிறார் என்பதற்காக நான் ஜெபிக்கிறேன். தேவனே, அவருடைய அன்பானவர்களை நீர் ஆறுதல்படுத்தி, நீர் சொன்ன இந்த வார்த்தையை நினைவு கூறட்டும். "அன்றியும் , சகோதரரே , நித்திரை யடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கை அற்றவர்களான மற்றவர்களைப் போல துக்கித்து அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்த பின்பு ஏழுந்திருந்தார் என்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந் தவர்களையும் தேவன் அவரோடே கூட கொண்டு வருவார். "நாங்கள் அதை நம்புகிறோம் கர்த்தாவே. அவர், "இந்த வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் தேற்றுங்கள்." என்று சொன்னார். மற்றும் அது உண்மையென்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இந்த பூமிக்குரிய கூடாரம் அழிந்து போனாலும், நமக்காக செய்யப்பட்ட கைவேலையால்லாத வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்; அது தேவனாலே நமக்கு உண்டாக்கிய, ஒரு சரீரத்தில், இந்த தேகத்தின் ஆவி விடுதலையான பிறகு, அந்த மகிமையின் சரீரதிற்குள் செல்வோம். முன்பு ஒரு காலத்தில் காளை, எருது, மற்றும் செம்மறி ஆட்டின் இரத்தத்தினால் மூடப்பட்ட பாவத்தின்னின்று விடுதலை ஆகி, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அவைகளை எடுத்து போட்டுவிட்டது என்பதை உணர்ந்து, தேவனுடைய பிரசனத்திற்குள்ளே நேரே சென்றுவிடுவோம். இதற்காக நாங்கள் எப்படி உமக்கு நன்றி சொல்லுவோம். ஓ, நாங்கள் பயமில்லாமல் நிற்கிறோம் ¡என்பதற்கு ஆச்சரியமில்லை, தேவனே. ஏனென்றால் எங்களுக்கு அந்த வெளிப்பாடு இருக்கிறது. பரிசுத்த ஆவி எங்களுக்குள் இருப்பதை உறுதி செய்கிறோம். அவர் இங்கு இருப்பதை மைப்பித்து காட்டி, தேவனுடைய வல்லமை நமக்குள் இருப்பதை நிரூபித்து, இந்த உலகம் முடிவடையும் வரலாற்றில் இந்த இருண்ட மணி நேரத்தில் நம்மை நேசிக்கிறார் என்று காண்பிக்கிறது. கர்த்தாவே, மருத்துவமனையில் உள்ள இந்த மனிதனை நீர் சுகப்படுத்தும்படி நான் ஜெபிக்கிறேன். இந்த மதிய வேலையில், உமது ஆவி அவர் மேல் இறங்கி விடுதலை தருவதாக. மேலும் அவரது சாட்சியின் நிமித்தம் அந்த மருத்துவமனையில் உள்ள மற்ற பிணியாளிகள் சுகம் பெற்று, எழுந்து வெளியேறட்டும். அதை அருளும் பிதாவே. எப்படியாவது, எந்த வழியிலாவது தேவனே, ஒரு பழமை வாய்ந்த கூட்டம் நடைபெறுவதாக. நமது தேவன் வருவதற்கு முன்னால், அமெரிக்காவில் இங்கு ஒரு உயிர் மீட்சி ஏற்பட்டு, பெரிய காரியங்கள் நடக்கட்டும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். 7. மருத்துவர் பாஸ்வர்த் கீழே செல்வதற்காக எத்தனை பேர் ஜெபிக்க போகிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள் பார்க்கலாம். எல்லாம் சரி. டாக்டர் பாஸ்வர்த், பாருங்கள். நீங்கள் மாடியில் முன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறோம். தேவன் தாமே உங்களோடு கூட இருப்பாராக. மற்றும் இந்த ஜனங்கள் உமக்காக ஜெபித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களோடு கூட நானும் ஜெபிப்பேன், மற்றும், அதன் பின், பிற்பாடு தேவன் எங்களை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறாரோ, அங்கெல்லாம் நாங்கள் செல்ல எங்களுக்காக ஜெபிப்பீர்களா? இப்பொழுது, சில வேளையில்..........நடக்கும் போது, மந்திரவாதி மருத்துவர்கள், அவ்விசுவாசிகள், நம்பிக்கை இல்லாதவர்கள், மற்றும் அனேகர், இங்கு நின்றுக்கொண்டு, விவாதித்துக் கொண்டு இருக்கும் போது, முதல் காரியம், என் மனதில் படுவது என்னவென்றால், "அமெரிக்காவில் உள்ள அன்பானவர்கள், எனக்காக ஜெபித்து கொண்டிருக்கின்றனர்." யாராவது ஜெபிப்பதற்கு கடமைப்பட்டிருக் கிறார்கள், ஏனென்றால், ஆயிரம் ஆயிரக்கணக்கில் மக்கள் உண்மையிலேயே ஜெபிக்க தங்களை அற்பணித்துள்ளார்கள். மற்றும் அத்தனை ஜனங்களின் ஜெபம் எனக்காக, தேவன் முன்னால் இடைவிடாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. (நான் என்ன அர்த்தம் கொள்கிறேன் என்று பாருங்கள்?) இடைவிடாமல் எல்லா நேரமும் சென்றுகொண்டிருக்கிறது. ஆகையால் அந்த வழியில் தான்........... 8. தேவனுடைய தூதனானவர் நான் செல்ல வேண்டும் என்று கூறினார், ஆகையால் அது என்னை பயப்படுத்துவதில்லை. பாருங்கள், அவர் இங்கிருக்கிறார் என்று அறிவேன். மேலும் இந்த மதியம் இங்கு அமர்ந்திருக்கும் மக்கள், சற்று..........நான் _ நான் பேசுவேனோ அல்லது இல்லையோ என்று எனக்கு தெரியாது. நான்.......இந்த இருக்கைகளின் நடைபாதையில் தேவனுடைய தூதன் மீண்டும் அசைவாடிக் கொண்டிருப்பதை அறிவேன். அதோ.......எனக்கு பயித்தியம் பிடித்துவிட்டது என்று நீங்கள் _ நீங்கள் நம்புகிறீர்களா? இல்லை ஐயா, நான் அப்படி இல்லை. நான் உங்களுக்கு உண்மையை தான் சொல்லுகிறேன். மற்றும் அந்த பையன் கொடுத்துகொண்டிருக்கும் ஜெப அட்டைகளும், நீங்கள் சுகம் பெற்றதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த பெண்மணி ஜெப அட்டையையே பார்த்ததே இல்லை, அதை பற்றி ஒன்றுமே தெரியாது, அல்லது இந்த அரங்கத்தில் சுகம் பெற்ற மீதம் உள்ளவர்களுக்கு அது தேவை இல்லை என்பது தெரியும். நான் உண்மையை தான் கூறுகிறேன் என்று அறிந்தால் போதும். அந்த உண்மை என்னவென்றால், இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்றும், மற்றும் அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்றும், மற்றும் எம்மாவூர் சீஷர்களோடு நடந்து சென்ற அவரே நம்மோடு கூட இந்நாட்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் இங்கு ஜீவிகிறார். அவர் தான் காரியங்களை செய்கிறார். இப்போது, அந்த சீஷர்கள் அவரோடு ஒரு நாள் முழுவதும் நடந்து சென்றும், அவர் யார் என்று கண்டுக் கொள்ள முடியவில்லை. அவர் ஏதோ ஒன்றை செய்த போது அவரை கண்டுக்கொண்டனர். அது அவர் தான் என்று அறிந்தனர். அது சரி தானே? 9. இப்பொழுது, நீங்கள் ஞாயிறு பள்ளி ஆராதனைக்கு இன்று காலை சென்றீர்கள். நீங்கள் உங்கள் பாடல்களை பாடி, உங்கள் பாடங்களை கற்றுக்கொண்டு, மற்றும் அது போல காரியங்களை செய்தீர்கள். மற்றும் மற்ற எல்லா கிறிதவர்களும் செய்வதுபோல செய்து, திரும்பி வந்திருக்கிறீர்கள். ஆனால் இந்த மதியும், இங்கே உட்கார்ந்துகொண்டு அவர் என்ன செய்தார் என்று பாருங்கள். அவர் இங்கிருக்கிறார் என்பதை நீங்கள் உணரவில்லையா? அது_அது _அதுதான் _ அதுதான் அவர், மற்றும் அவர், இங்கே நமக்காக வாக்குத்தத்தம் பண்ணின ஆசீர்வாதங்களில் எதையும் நலமானதாக செய்து முடிக்க அவர் இங்கே இருக்கிறார். இப்பொழுது, இந்த ................எனக்கு செய்தி தருவதற்கு சமயம் இல்லை. எனக்கு வெறும் 30 நிமிடம் மட்டும் உண்டு என்பதை உணர்வில் கொள்ளுங்கள். நான் ஒரு சாட்சி சொல்வதற்காக இந்த நேரத்தை உபயோகிக்க வேண்டும். கடிகாரத்தை பார்த்தவாறு, ஒரு காரியத்திற்காக பேசி, 4:30 மணிக்குள் முடிக்க போகிறேன். ஆதலால் ஆராதனைக்கு 7:30 மணிக்கு வருவதற்கு உங்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கும். இப்போது, இன்றிரவு முடிவு ஆராதனை இருக்கும். பெரிய காரியங்களுக்காக எத்தனை பேர் ஜெபிக்க வாஞ்சிக்கிறீர்கள்? அது அற்புதமாக இருக்கிறது. நான்...........அதற்குள் வந்து விடுவேன். ஜெப அட்டைகளை ஆறு முப்பது மணி அளவில், அல்லது அது போல கொடுப்பதாக அந்த பையன் சொன்னான் என்று நம்புகிறேன். மேலும், உங்கள் வியாதியஸ்தரையும், சுகவீனரையும் கொண்டு வந்து இந்த இடத்தின் அருகில் கிடத்தி வையுங்கள். மற்றும் - மற்றும் அவர்களுக்காக ஜெபித்து கொண்டிருங்கள். ஜெப அட்டையை குறித்து கவலைபட வேண்டாம். ஜெபித்துக்கொண்டே இருங்கள். அதற்கு பிறகு, நீங்கள் சற்று_ சற்று ஜெபித்து கொண்டிருக்கும் போது மீதம் உள்ளதை தேவன் பார்த்துகொள்ளுவார். 10. எல்லாம் சரி. பரிசுத்த லூக்கா இரண்டாம் அதிகாரத்தில், நமது தேவனுடைய பிறப்பை குறித்த மிகவும் பிரபலமான வேத பகுதி உள்ளது. நான் அதை வாசிக்க விரும்புகிறேன் _ இந்த மிஷனரி செய்தியை தொடருவதற்கு அல்ல. நிச்சயமாக இல்லை.ஆனால் ஒரு முக்கிய குறிப்பை சொன்னால் அது இந்த இரவில் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன். நான்...... இங்கே இருப்பவர்கள் எத்தனை பேர் கிறிஸ்தவர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்? ஓ பார்பதற்கு 100% போல உள்ளது. அது அற்புதமாக உள்ளது. என்னுடைய _ என்னுடைய முந்திய கூட்டங்களில் நடைபெறாத ஒன்று இந்த கூட்டத்தில் நடைபெற்றது. தேவனுடைய தூதன் சரியாக ஜனங்களிடம் இடைபட்டுகொண்டிருக்கும் போது, நிறுத்தி சொன்னார், "பீட அழைப்பை ஏற்படுத்து." மற்றும் சகோதரன் பாக்ஸ்டர் சொன்னதை கேட்டேன், என் சகோதரனே, யார் அதில் இயற்கை திறன் பெற்றவர். இந்த இரவுக்கு முந்தின இரவில் ஒரு பீட அழைப்பை கொடுக்கவும் _ அல்லது, நான் நம்புகிறேன் இந்த இரவே கொடுக்கவும். எனக்கு _ எப்போது அது ஏற்பட்டது என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் உள்ளே பிரவேசிக்கும் போது, பில்லி வந்து என்னை அந்த அறைக்குள் கொண்டு சென்றான். மற்றும் அவன் பீட அழைப்பை கொடுக்கும் போது, நான் வெளியே நடந்த போது, சுமார் ஐந்து பேர் எழுந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர், அதே நேரத்தில், தேவன் அங்கே அரங்கத்தினரோடு அசைவாடிக் கொண்டிருக்கையில் ,என்னை நிறுத்தி, "பீட அழைப்பை கொடுக்கவும்." என்று சொன்னார். மற்றும் முப்பதுக்கு மேல் ஏற்றுக்கொண்டனர். பாருங்கள்? கீழ்படிதலை பாருங்கள், அவர் உங்களிடம் என்ன செய்ய சொன்னாரோ அதை செய்யுங்கள். அது எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டாம். கர்த்தர் என்ன செய்ய சொன்னாரோ அதை செய்யுங்கள், மற்றதை அவர் பார்த்துக்கொள்வார். அது அப்படிதான் அல்லவா? ஓ, அனுதின காரியங்களை மறந்து, அல்லது எதுவானாலும் மறந்து, நேரத்தை குறித்த உணர்வை இழந்து, அல்லது வேறே எதையும் இழந்து, தேவனோடுகூட சபை இருக்குமானால் அவர் என்ன செய்ய சொன்னாரோ அதை செய்யுங்கள். சபைக்கு அப்படிபட்ட ஒரு ஆவிக்குரிய நடத்துதல் தேவை என்பதை நம்புகிறீர்கள் அல்லவா? எங்களுக்கு, எங்களுடைய நிரல் எல்லாம் வெளி கொணரப் பட்டுள்ளது, மேலும் வரிசையாக்கபட்டுள்ளது. மேலும் அப்போஸ்தலர் சபைக்கு அவ்வாறு ஒரு நிரல் நடத்தப்பட தேவனுடைய நோக்கம் அல்ல. பரிசுத்த ஆவியால் நடத்தப்படும்படி அது தேவனுடைய நிரல் என்று நான் நம்புகிறேன். அவர் என்ன சித்தம் கொண்டாரோ அதன் வழியில் தான் இருக்கும். 11. இப்போது, நாம் 2 ஆம் அதிகாரத்தில் 23 ஆம் வசனத்தை படிப்போம். எனக்கு உரிமை உண்டு என்று நான் நம்புகிறேன். ஒரு கணம் பொறுமையோடு இருக்கவும். இல்லை அது 2 ஆம் அதிகாரத்தில் 25-ம் வசனம். அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக் கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடைய மாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப் பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில், அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். தேவன் தாமே அவருடைய ஆசீர்வாதங்களை இந்த வார்த்தைக்கு இப்போது கூட்டுவாராக........சமயத்தில் உங்களுடைய முழு கவனத்தையும் பின்னால் உள்ள கடிகாரதிற்கு ஏற்பார் போல 30 நிமிடத்திற்கு செலுத்துவீர்கள் என்றால், நான் ஜெபித்து, விடைபெறுவேன். அனால் நீங்கள் கூர்மையாக கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் ஒரு சாட்சியை பகருகுகிறேன். 12. இப்போது ஒரு வார்த்தையின் மூலமாக நான் சாட்சி பகருகிறேன். நானொரு பகுதியை எடுத்து அதற்கு எதிர்பார்ப்பு என்று கூறுகிறேன். ஏதோ ஒன்றிற்காக எதிர்பார்த்தல். நீங்கள், ஏதோ ஒன்றிற்கு எதிர்பார்த்துக் கொண்டிருத்தல். நீங்கள் ஏதாவது ஒன்றுக்கு எதிர்பார்த்தது உண்டா? பொதுவாக, நீங்கள் எவைகளை எதிர்பார்க்கிறீர்களோ அவைகளை பெற்றுக் கொள்வீர்கள். உங்களுக்கு அது தெரியுமா? நீங்கள் கூட்டங்களுக்கு வரும்போது, "நல்லது, நான் கீழே செல்கிறேன் இதில் ஒன்றும் இல்லை." என்று சொல்வீர்கள் என்றால். நல்லது அது தான் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் கீழே சென்று, நல்லது நான் _ நான் கீழே சென்றாலும், அங்கே எனக்கு சுகம் கிடைக்கப் போவது இல்லை. நல்லது அந்த விதமாக தான் நீங்கள் திரும்பி போவீர்கள். தேவன் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கையோடு வருவீர்கள் என்றால், அவர் அதை செய்வார். கூட்டங்களை குறை கூறுவதற்கும், எப்படி நடத்துகிறார்கள் என்பதை குற்றம் கண்டுபிடிக்க எதிர்பார்ப்போடு வருவீர்கள் என்றால், சாத்தான் அநேக காரியங்களை காட்டுவான். உங்களுக்கு அநேக காரியங்களை காட்டுவான். ஆனால் கூட்டத்தில் குற்றம் காணவேண்டும் என்று வராமல், "தேவனே, இதில் நீர் எங்கே இருக்கிறீர் என்று நான் பார்க்கவேண்டும்." என்று சொல்லி நீங்கள் வருவீர்கள் என்றால், தேவன், அதில் அவர் இருப்பதை காட்டுவார். நீங்கள் என்னவெல்லாம் எதிற்பார்பீர்களோ, கர்த்தர் அதை உங்களுக்கு அருளுவார். அது உங்களுடைய எதிர்பார்ப்பு. இப்பொழுதும், தேவன் இந்த இரவில் ஒரு சிறந்த விதத்தில் அசைவாடுவதை நீங்கள் பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன், நாம் இங்கு வந்ததிலிருந்து அவர் அசைவாடிக் கொண்டு இருக்கிறார். நாம் தேவனிடத்தில் நம் மத்தியில் ஒரு முடவனையோ, ஒரு குருடனையோ, ஒரு செவிடனையோ, ஒரு ஊமையனையோ, ஒரு வியாதியஸ்தனையோ, அல்லது முடவனையோ சுகம் பெறாமல் இருக்க கூடாது என்று, கேட்போம். அதில் நாம் நம்பிக்கையுடையவர்களாய் இருப்போம். என்னோடு கூட சேர்ந்து அதை செய்வீர்களா? எல்லோரும் சுகம் அடைய வேண்டும் என்று நாம் எல்லோரும் இப்பொழுது எதிர்பார்ப்போடு இருந்தால், தேவன் அதை செய்வார் என்று நான் நம்புகிறேன். 13. பொதுவாக, நாம் எதிர்பார்ப்பை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது, நாம் எதை எல்லாம் செய்ய எதிர் பார்க்கிறோமோ அவை எல்லாம் எவ்வாறு இருக்க வேண்டுமோ அவை அப்படியே இருக்கும் என்று ஏன் நினைக்கின்றோம். மற்றும் இப்பொழுது, உங்களை சந்திப்பதற்காக எனக்கு ஒரு முன்பதிவு கிடைத்து, உங்களை எதிர்பார்த்து கொண்டிருந்தால் _ நீங்கள் அங்கே இருக்க வேண்டும் என்று நான் _ நான் எதிர்பார்பேன். மற்றும் எனக்கு ஒரு காரியம் மட்டும் தெரியும்; தேவனை எப்போதாவது, எங்கேயாவது, எப்படியாவது நாம் சந்திப்பதற்கு ஒவ்வொருவருக்கும் இன்று முன்பதிவு கிடைத்துள்ளது. உங்களுக்கு அது தெரியுமா? "அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது," மற்றும் நாம் எல்லோரும் அதை சந்திக்கப்போகிறோம். நீங்கள் இங்கே அறிக்கையிட்டால், சில மனிதர்களின் பாவங்கள் அவர்களுக்கு முன் செல்கிறது. சிலருக்கு அவர்களை பின் தொடருகிறது. ஆகையால் நாம் தேவனை இப்போதே சந்திப்போம். காரியங்களை இப்போதே சரி செய்து, அதற்கு பிறகு அவர் தமது வல்லமையிலும், மகிமையிலும் வருவதற்கு எதிர்பார்த்து, "உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்று சொல்ல எதிர்பார்ப்போம். 14. பிரயாணத்தில் அநேக காரியங்களை நான் கண்டிருக்கிறேன்......ஒரு காரியம் ஞாபகத்திற்கு வருகிறது, குறிப்பாக ஒரு கூட்டத்தில் நான் ஆராதனையை அப்பொழுது தான் தொடங்கி இருந்தேன். மற்றும் என்னால் அதை மறக்கவே முடியாது.........என் மனைவி இந்த மதியும் இங்கில்லாததால் நான் சொல்கிறேன். சரியா. மற்றும் நாங்கள் கீழே சென்றோம் ......நான் செயின்ட் லூயிஸ்க்கு சென்றேன், அங்கு தான் செயின்ட் லூயிஸ்ஸில் இருந்த எல்லா மருத்துவர்களும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பெட்டி டாஹர்ட்டி (Betty Daugherty) குணமாக்கப் பட்டார். மற்றும் நான் அங்கு சென்று ஜெபித்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் திரு டாஹர்ட்டி, ஒரு நல்ல போதகர் எனக்கு அறிமுகமானார். எனக்கு புகைவண்டியில் செல்வதற்கு பணமில்லை. மற்றும் சபையார் போவதற்கும், திரும்பி வருவதற்கும் 11 டாலர் வண்டி கட்டணம் எடுத்தார்கள். எனக்கு போடுவதற்கு ஒரு கோட் இல்லாமல் இருந்தது, ஆகையால் ஒரு சகோதரன் தனது கோட்டை, நான் அணிவதற்கு கொடுத்தார். மற்றும் நான் ஒரு நாற்காலி இருக்கைகள் (chaircar).........மூலமாக சென்று, மறுநாள் காலையில் சென்றடைந்ததேன். திரு டாஹர்ட்டி, ஏதோ ஒன்றை, எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்தார். அவர் சொன்னார், "சகோதரன் பிரன்ஹாம், வெளிப்பாடுகளை காட்டுவதற்கு, கர்த்தராகிய இயேசு உங்களை சந்திக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்." மற்றும் நான், "அது சரி" என்று சொன்னேன். "எனது மகள் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" நான் சொன்னேன், "இல்லை ஐயா, எனக்கு ஒன்றும் தெரியாது." அவள் வீட்டிற்கு சென்றோம், மற்றும் அந்து சிறிய பெண் அங்கு கூச்சலிட்டு கொண்டு, படுத்திருந்தாள். அவள் எடை...........இவ்வளவு தான் இருந்தது. சுருட்டை முடிகொண்ட, மிகவும் மோசமான நிலையில் அந்த பெண் இருந்தாள்........மற்றும் நான், "மருத்துவர் என்ன சொன்னார்" என்று கேட்டேன். அவர் சொன்னார், ஓ சகோதரன் பிரன்ஹாம், நான் பணத்தின் மேல் பணத்தை செலவழித்து விட்டேன், ஆனால் அவர்களுக்கு அது என்ன வென்று கூட சொல்ல தெரியவில்லை. அவர் சொன்னார், "அது, செயின்ட் விட்டஸ் டான்ஸ் (Saint vittus dance) என்று சொல்ல கூடிய ஒரு வியாதி. ஆனால் அவர்கள் அதை நிச்சயமாக கூற முடியவில்லை." மற்றும் சொன்னார், "அவள் வாரக்கணக்கில் இப்படித்தான் படுத்திருக்கிறாள், சபையார் எல்லாரும் உபவாசம் இருந்து ஜெபித்தனர், மற்றும் என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. மேலும் யாரோ ஒருவர் உங்களை பற்றி சொன்னார்கள்......"எனக்கு, யார் என்று தெரியாத ........ 15. அதனால் நான் உள்ள சென்று அந்த சிறு பெண்ணுக்காக ஜெபித்தேன். எல்லா ஜனக்கூட்டமும் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் போதகர் வீட்டிலிருந்து, ஆலயத்திற்கு சென்று ஜெபித்தோம். மேலும் நான் திரும்பி சென்றேன். ஒன்றுமே நடக்கவில்லை. நிச்சயமாக அந்த நாட்களில் எனக்கு இன்று இருப்பது போல கூட்டங்கள் கிடையாது. நான் ஒரு பிணியாளரை சந்திக்க சென்றால், தேவன் அந்த பிணியாளருக்கு என்ன செய்யப் போகிறாரா என்று அறிந்துகொள்ளும் வரைக்கும், நான் அங்கேயே தங்கி விடுவேன். ஆகையால் அதன் பிறகு......... மற்றும் நான் வெளியே அந்த முற்றத்திற்கு சென்று, மேலும் கீழுமாக நடந்து கொண்டிருந்தேன். செயின்ட் லூயிஸ் பற்றி எனக்கு அவ்வளவாக ஒன்றும் தெரியாது. நான் அந்த சாலை வழியாக கீழே சென்று சிறிது தூரம் சென்று திரும்பினேன். நேரம் கடந்துக் கொண்டு இருந்தது. நான் அங்கு எட்டு மணி நேரமாக இருந்தேன். மற்றும் நான் திரு டாஹ்ட்ரி அவர்களின் வண்டியில் அமர்ந்திருந்தேன். மேலும் அந்தக் வண்டியின் குறுக்கே ஒரு காட்சி சென்று கொண்டிருந்தது. பின்பு என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும். 16. அதற்குப் பிறகு மதிப்பிற்குரிய டாஹ்ட்ரி உடைய தகப்பன் திரு டாஹ்ட்ரி அவர்கள் கதவின் அருகே வந்து, என்னிடம் சொன்னார், "சகோதரன் பிரன்ஹாம், இதுவரைக்கும், ஏதாவது பற்றி நீங்கள் கேள்விப்பட்டீர்களா?" மற்றும் இளம் திரு டாஹ்ட்ரி, அந்த வீட்டு பக்கமாக வந்து கொண்டிருந்தார். நான் சொன்னேன், "ஆமாம், எனக்கு கர்த்தர் உரைக்கிறதாவது" என்பது என்னிடம் உள்ளது என்று சொன்னேன். அவர் உடனே, கைகளை உயர்த்தி, சத்தமாக கூச்சலிட ஆரம்பித்தார். மற்றும் நான் சொன்னேன்.........அவர்......... இந்த இடத்தில் இருந்து வந்தார். அவருடைய வீடு............கென்டக்கியில் இருந்தது. ஆனால் அவருடைய சபை, அவரை செயின்ட் லூயிசுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தது. அதை செய்ய பொறுப்பேற்றுக் கொள்வதற்காக சபை அவரை அனுப்பியது என்று நான் நினைக்கிறேன். மற்றும் அதன் பிறகு நான் சொன்னேன், என்னிடம், "பரிசுத்த ஆவியானவர் உரைக்கிறதாவது." என்பது என்னிடம் உள்ளது என்றேன். அவர், "நான் என்ன செய்ய வேண்டும்." என்று கேட்டார். நான், "முதலாவது, உங்கள் மனைவியைத் தவிர, இந்த வீட்டிற்குள் இருக்கும் அனைவரையும் எல்லா ஜனங்களையும் வெளியில் அனுப்பி விடுங்கள்." என்று சொன்னேன். அவர் சொன்னார், "எல்லாம் சரி." நான் சொன்னேன், "ஒன்றை குறித்தும், இப்பொழுது சந்தேகிக்க வேண்டாம்." மற்றும் நாங்கள் உள்ளே சென்றோம், நாங்கள் அந்த அறைக்குள் சென்றோம், மற்றும் அந்த சிறு பெண் அங்கே படுத்துக் கொண்டிருந்தாள், நான் அவளுடைய தாயிடம், "இப்போது, எதை குறித்தும் சந்தேகிக்க வேண்டாம், நீங்கள் உங்களுடைய சமையல் அறைக்கு செல்லுங்கள்." என்று சொன்னேன். நான் அவர்களுடைய சமையலறையை பார்த்ததே இல்லை. அது ஒரு பெரிய வீடாக இருந்தது, மற்றும் நான் சொன்னேன், "கீழே அடியில் உள்ள இழுப்பரையில் இதுபோல ஒரு சிறு சட்டியை காண்பீர்கள். அதை நீங்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வாங்கிக் கொண்டு வந்தீர்கள். நீல கிரானைட்டால் உண்டானது. அதில் ஒன்றுமே இருந்ததில்லை. அவள், "ஆமாம் ஐயா, அது சரிதான்." என்று சொன்னாள். நான் சொன்னேன், "அந்த பானையில், குழாயில் உள்ள தெளிந்த தண்ணீரினால் நிரப்பவும். மற்றும் ஒரு வெள்ளை நிற கைக்குட்டையை கொண்டு வரும்படி சொன்னேன். மற்றும் அவள், " எல்லாம் நல்லது" என்று சொன்னாள். அவள் கீழே சென்று அதைக் கொண்டு வந்தாள்! மற்றும் நான் சொன்னேன். "மரியாதைக்குரிய டாஹ்ட்டி, நீங்கள் எனது இடது பக்கமாக, படுக்கையின் பாதத்தில் முட்டிபோடவும், மற்றும், தந்தையே _ தந்தையே நீங்கள் இங்கே முட்டி போடவும்." (மதிப்பிற்குரிய டாஹ்ட்டி அவர்களின் தந்தை, அந்த குழந்தையின் தாத்தா) அவர் அதை செய்தார். நான் சொன்னேன், "இப்போது திருமதி டாஹர்டி, நான் தேவனுடை ஜெபத்தை சொல்லும்போது" பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, என்று சொல்லும் போது, அந்த பானையிலுள்ள கந்தையை எடுத்து பிழிந்து அவள் முகத்தை துடைத்து விடவும். மற்றும் ஜெபத்தை ஏரெடுக்கும் போது, பாதியில், அவளுடைய கரங்களை அப்படியே துடைத்து விடவும், மற்றும் ஜெபத்தின் முடிவில் அவளுடைய பாதத்தை துடைத்து விடவும், ஏனென்றால் கர்த்தர் உரைக்கிறதாவது, இந்த கடைசி தண்ணீர் அவள் பாத்ததின் மேல் துடைக்கும் போது அந்த குழந்தையை கட்டிபோட்டு இருக்கும் அந்த பிசாசு அவளை விட்டு ஓடி போவான். நான் சொன்னேன் "சந்தேகிக்க வேண்டாம்." மற்றும் அவள் ........ஏன் அவளுடைய சிறிய நாக்கு, உதடுகள் மற்றும் எல்லாம் அரிக்கப்பட்டு, அவளுடைய கண்கள் உள்ளே சொருகி இருக்கிறது........நான் நினைக்கிறேன் அவள் படுக்கையில் வாரக்கணக்கில் சாப்பிடாமல் இருந்ததால் தான்...... 17. ஒருவேளை உங்களுக்கு மதிப்பிற்குரிய ராபர்ட் டாஹார்டியை கேட்க வேண்டும் என்றால், அவருடைய முகவரி இதோ 2006 கானோ அவென்யூ, செயின்ட் லூயிஸ், மிஸ்சௌரி மற்றும் அந்த குழந்தை அங்கே மூன்று மாதம் அதே நிலைமையில் இருந்தது என்று நம்புகிறேன். கூச்சலிடவும், தலை முடியை பிடித்து இழுக்கவும், மற்றும் அந்த முகத்தில் காயங்களுடன், கதருவதை பார்த்த அந்த தாய் சோர்ந்து போய்விட்டாள்......... ஆகையால், நாங்கள் முட்டி போட்டு, நான் ஜெபிக்க ஆரம்பித்தேன், "எங்கள் பரலோகத்தின் பிதாவே, திருமதி டாஹட்டி, அந்த குழந்தையின் முகத்தை துடைத்தார்கள். நான் ஜெபத்தை "ஆமென்" என்று முடிக்கும் போது" அந்தப் பாதத்தை அவர்கள் துடைத்தார்கள். நான், "ஆமென்" என்று சொன்னபோதும் கூட அந்தக் குழந்தை கதறி கொண்டே தான் இருந்தது. நான் எழுந்து சொன்னேன், "வானத்தையும் பூமியும் சிருஷ்டித்த தேவனாகிய கர்த்தாவே, அந்த குழந்தைக்கு ஜெபிக்கும் படி என்னை அனுப்பினவரே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அந்த குழந்தையின் மீது உள்ள அந்த வியாதியின் ஆவியை உடனே அவளை விட்டுப் போகும் படி நான் கட்டளையிடுகிறேன்" அந்த சிறு பெண் சுற்றிப் பார்த்து சொன்னாள், "அம்மா எங்கே இருக்குறீங்க?" மற்றும் அவளுடைய தாய் உரத்த சத்தமிட்டு, கையில் இருந்த அந்த பானையை கீழே போட்டுவிட்டு, தரையில் விழுந்தாள். அவளுடைய, தகப்பன் உரத்த சத்தமிட்டு கொண்டு, கீழே விழுந்தார். அவர் ஒரு பரிசுத்த உருலையராக இருந்தாலும், அவர் அழுது கொண்டு இருந்ததை பார்த்து இருக்க வேண்டும். மற்றும் அந்த வயதான தந்தை, அந்த தாத்தா கட்டிலின் மேல் விழுந்து, தேவனை ஸ்தோதரித்துக் கொண்டு இருந்தார். எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து விட்டன. அந்த சிறு பெண், எழும்பினாள், அவளுடைய கையை பிடித்து, நான் சொன்னேன், "தேனே, உனக்கு என்ன தேவை?" அவள் "நீங்கள் யார்?" என்று கேட்டாள். நான், "நான் சகோதரன் பிரன்ஹாம்" என்று சொன்னேன். மாற்றும் அவள், "எனக்கு அந்த பால் ஷேக் ஒன்று வேண்டும், தெரியுமா?" என்று சொன்னாள். நான், "என்னோட வா நாம் சென்று அதை வாங்கலாம் என்று சொன்னேன்." அவள் ஒரு சிறிய பைஜாமாவை அணிந்து கொண்டு இருந்தாள், மூன்று மாதம் கழித்து, முதல் முறையாக படுக்கையை விட்டு அவள் அந்த மருந்து கடை வழியாக நடந்து வந்தாள். நான் 2 பால் ஷேக் ஆர்டர் செய்து அந்த குழந்தையுடன் குடித்தேன். மற்றும், அந்த கதவுகள், மக்களால் நிரப்பப்பட்டு, நெருக்கப்பட்டு இருந்தன, அது போலவே வெளியில் உள்ள புல் மைதானமும் நிரப்பப்பட்டு இருந்தன. எங்களுக்கு செயின்ட் லூஸ்ஸில் உள்ள கீல் அரங்கத்தில் ஒரு கூட்டம் இருந்தது, அந்த முதல் இரவு அங்கே 14000 பேர் கூடியிருந்தனர், மற்றும் அவர்களை வெளியே போக செய்தனர்: எதிர்பார்ப்பு. நான் என்ன அர்த்தம் கொள்கிறேன் என்று பாருங்கள். 18. கீழே ஆர்கன்சாசில் உள்ள ஜோன்ஸ்பர்ரோவில்.........ரிச்சர்ட், டீரீட்ஸ் (Richard T. Reeds) அவர்களை எத்தனை பேர்களுக்கு தெரியும். இங்கே யாருக்கோ ஒருவருக்கு தெரியும் போல உள்ளது. யாரோ ஒருவர் கரங்களை உயர்த்துகிறார். சகோதரன் ரீட்.......பின்னால் உள்ள அந்த நபரா, இங்கே.....மிகவும் நல்லவர். நான் அங்கு ஜோன்ஸ்பர்ரோ கூட்டங்கள் நடத்தும் போது நீங்கள் அங்கே இருந்தீர்களா? நல்லது, இதோ ஒரு அத்தாட்சி. நல்லது. எங்களுக்கு அநேக நாட்கள் கூட்டங்கள் இருந்தது. என்னுடைய மனைவி, ஒரு கூட்டம் அப்படி இருந்ததை அவள் பார்த்ததில்லை: என்னுடைய முதல் வெளியேறுதல். "சூரியன்" என்னும் பத்திரிக்கை, "ஆர்கன்சாஸ் சூரியன்" என்னும் பத்திரிக்கை, இருபத்து எட்டாயிரம் (28,000) பேர்கள் நகரத்திற்குள் பிறவேசித்திருக்கிறார்கள் என்று சொல்லும் வரைக்கும், ஜனங்கள் அங்குக் கூட்டம் கூடினர் என்று நான் நம்புகிறேன். மற்றும் பத்திரிக்கை இருபத்து எட்டாயிரம் (28,000) பேர்கள் கூடினர் என்று சொல்லும் போது, அங்கு எல்லோரும் இருந்தனர் என்று அர்த்தமாகும். மற்றும் முப்பது அல்லது நாற்பது மைல்கள் அந்த நகரத்தை சுற்றி மக்கள் கூடி இருந்தனர். உங்களுக்கு அங்குள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒரு அறை கூட வாடகைக்கு விடாமல் இருந்ததாக பார்க்க முடியாது. மற்றும், அவர்கள் அங்கே குறைந்த விலையில் உணவுக்கென்று இடங்களை அமைத்தனர். மற்றும் அரங்கத்தில் உள்ள மக்கள் வெளிய செல்ல முற்படவில்லை. அவர்கள் அங்கேயே தங்கி, தங்களுடைய அருமையானவர்களுக்கு ஹாம்பர்கர்களை (hamburgers) கொண்டு வருவார்கள். அங்கேதான் நான் அநேக நாட்களாய் தங்கி அங்குள்ள எல்லோருக்கும் ஜெபிக்க முற்பட்டேன். 19. மற்றும், எனது மனைவி அந்த இரவில் கீழே வந்ததை நினைவுகூருகிறேன். நாங்கள் இரண்டு நகரங்களுக்கு அப்பால் இருந்தோம். காவலர்கள் அங்கே இருந்தார்கள். தெருக்கள் எல்லாம் ஜனங்களால் நிரம்பி இருந்தன. அரங்கத்தில் இல்லை, பண்ணைகள், வயல்கள், தெருக்கள் எல்லா இடமும் நின்றுகொண்டிருந்த ஜனங்களால் அடைக்கப்பட்டு இருந்தனை, அவர்களுக்கு ஏதோ ஒன்று நடந்துகொண்டு இருப்பதை பார்பதற்கு நின்றுகொண்டிருந்தனர். மற்றும் நான் அங்கு இறங்கினவுடன், என்னை நன்கு நடத்தி செல்பவர்கள், என்னை கூடத்திற்குள் அழைத்து செல்ல நின்று கொண்டிருந்தனர். எனது மனைவி எப்படி அங்கிருந்து கூட்டதிற்குள்ளே இங்கு வந்தாள் என்பதே எனக்கு தெரியவில்லை. மற்றும் நாங்கள் அந்த இடத்திற்கு சென்றோம். மேலும் அரங்கம் இருக்கும் இடத்திற்கு நான் அடைந்த பிறகு நல்லது, நான் நடைமேடைக்கு வந்தேன். நான் மேடைக்கு வந்தவுடன், பார்த்தபோது அந்த இடம் வெறும், அவசர சிகிச்சை வண்டிகளும், தோகு படுக்கைகளாலும் நிரம்பி இருந்தன. பதினைந்து வயது நிரம்பிய ஒரு சிறுமி காச நோயால் மரித்துக் கொண்டிருந்தாள், இரண்டு பணிப்பெண்கள் இங்கே நின்று கொண்டிருந்தனர். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் சுகம் அடைய போகிறாள் என்று எனக்கு தெரியும். அந்த வழியை எனக்கு சொல்ல முடியும், அதே நேரத்தில் அந்த பெண்மணியும் சுகம் பெற போகிறாள் என்று எனக்கு தெரியும். இப்பொழுது எனக்கு தெரியும், அவள் சுகம் அடைய போகிறாள். மேலும் நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது கணங்களுக்குள், நான் பார்த்துக்கொண்டிருந்த போது, பின் புறத்தில், யாரோ ஒருவர், நீல நிற உடையை அணிந்து, இது போல சைகைக்காட்டி கொண்டிருந்ததை பார்த்தேன். மற்றும் அது ஒரு வண்டி ஓட்டுநராக இருந்தார். நான், "என்னை கூப்பிடுகிறீர்களா?" என்று கேட்டேன். அவர் சொன்னார், "ஆமாம் ஐயா." அவர் சொன்னார், "சகோதரன் பிரான்ஹாம்.........." இங்கே சுமார் பதினைந்து ஆம்புலன்ஸ் வரிசையாக நின்றுக்கொண்டிருக்கிறது. அவர் நான் கீழே இறங்கி வந்திருக்கிறேன்.......என்று சொன்னார். 20. அன்றைய தினத்தில் மிஸ்சௌரியில் கிளமெண்டில் உள்ள கென்னட் என்னும் இடத்தில் (Kennett) இடத்திலிருந்து ஒரு மனிதன் சுகம் பெற்றான். நான் நினைக்கிறேன். அது மிஸ்சௌரியின் கீழ் பாகத்தில் உள்ளது. அந்த மனிதன் பத்து வருடங்களாக குருடனாக இருந்தான், பார்வையற்றோருக்கான ஓய்வு தொகையை பெற்றுக் கொண்டிருந்தான். அந்தக் கூட்டங்களில், அந்த இரவு அவன் சுகம் பெற்று சென்று விட்டான். மறுநாள் பகல் வேளையில், அவன் வீட்டுக்கு சென்றான். பார்வையற்றோர் உபயோகிக்கும் கோல் அவனிடம் இருந்தது. அவனுடைய தொப்பி அந்த கோலின் மீது இப்படியாக இருந்தது. அவன் மெத்தடிஸ்ட் ஆலயம் வழியாக நடந்து வருகையில், கூச்சலிட்டுக் கொண்டு கர்த்தரைப் போற்றிக் கொண்டு வந்தான். ஏன் (அவனை வெளியே தள்ளி விட்டனர்), மேலும் அவன் அப்படியே கத்தோலிக்க ஆலயத்துக்கு நேராக ஓடினான், அங்கேயும் அவனை வெளியே தள்ளி விட்டனர். ஏன், அவன் அந்த பட்டணத்தையும், எல்லாவற்றையும் வெறிக்க செய்தான். மேலும் அவனை வெளியே கொண்டு சென்று, வானொலியில் பேச வைத்தனர். நான் நினைக்கிறேன்.........அவன் அந்த ஜோன்ஸ் பரோவிலிருந்து (Jonesboro) கீழே உள்ள சிறிய இடமாகிய (Blytheville) ஓ அந்த ப்லை _ ப்லைத்வில்லேவிலிருந்து வந்திருப்பான். உங்களுக்கு யூகிக்க முடிகிறதா? (Arkansas) ஆர்கன்சாசிலிருந்து வந்தால், ப்லைத்வில்லே உள்ளது. அங்கு தான் அவர்கள் இருந்தார்கள். அவனுடைய _ அவனுடைய ஒலிபரப்பு அந்த காலை வேளையில் வானொலியில் நடந்தது. அநேக வருடங்களுக்கு முன்பாக, அங்கே அவன் காலணிகளை தைப்பான். மேலும் அங்கே அவன் பூரண சுகத்துடன் இருந்தான். மற்றும் அவனுக்கு பார்வை இருந்தது. அவன் சரியாக ஆலயத்தில் நின்று வேதாகமத்தையும் எல்லாவற்றையும் வாசிப்பவன்: அதற்கு பிறகு, அவன் கண் பார்வை முற்றிலுமாக இழந்து விட்டான். பத்து வருடமாக பார்வையற்றோருக்கான ஓய்வூதியும் பெற்று வந்தான். மற்றும் அவர்களுக்கு மிகவும் கடினமான நேரமாக இருந்தது. 21. அவன்.........இந்த மனிதன் சொன்னான், "நான் நோயாளிகளை இங்கே கொண்டு வந்திருக்கிறேன், மற்றும் மரித்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணை நான் கொண்டு வந்திருக்கிறேன். அவள் ஒரு வேளை மரிக்காமல் இருந்தால் பரவாயில்லை. மற்றும் சொன்னான், "எங்கிருந்தும் எனக்கு ஒரு மருத்துவர் கிடைக்கவில்லை." மேலும் சொன்னான் "எனக்கு _ எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று சொன்னான்." "உங்களால் அவளிடம் வரமுடியுமா?" என்று சொன்னான். நான் சொன்னேன், "சகோதரனே, இங்கே பாருங்கள், அந்த சுவரோடு நெருக்கி ஆயிரம் பேர்கள் நின்றுக் கொண்டிருக்கின்றனர். எப்படி நான் அங்கு வர முடியும் என்று சொன்னேன்?" சிலர் வெளியே வந்து, "நீங்கள் செல்ல விரும்பினால் நாங்கள் உங்களை அழைத்துச் செல்கிறோம்" என்று கூறினர். சகோதரன் ரீட் (Reed) மேடை மீது ஏறினார். "தொடர்ந்து செல்லுங்கள் என்று சொன்னார்." மற்றும் அங்கே வெளியில் _ பரிதாபமான பகுதி, என்னவென்றால் அந்த அன்பார்ந்த ஜனங்கள்..........நான் இதை சொல்ல மாட்டேன், ஏனென்றால் இங்கே சில ஆர்கன்சாஸ் மக்கள் உட்கார்ந்து கொண்டு இருக்கின்றனர். பாருங்கள்? நான் சொல்வது என்னவென்றால், அவர்களுக்கு இந்த உலகந்தின் பொருட்கள் அதிகமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிச்சியமாக இந்த பெரிய நகரங்களை வெட்கபடும்படியான விசுவாசம் அவர்களிடம் இருந்தது. அது சரியா? அவர்கள் அங்கே வருவார்கள். வாலிப பெண்கள், அவர்களுடைய காலனிகளையும், காலுறைகளையும், கைகளில் எடுத்துகொண்டு, வருவார்கள். நான் அந்த காட்டில் ஜெபித்து கொண்டு இருப்பதை அறியாமல் வருவார்கள். மேலும் நான் பார்க்கும் போது அந்த சாலை ஓரமாக அவர்கள் வெறுங்கால்களில் நடந்து _ கால்களில்படிந்து இருந்த தூசியை தட்டி விட்டு, காலணிகளையும் காலுறைகளையும் அணிந்து கொள்வார்கள்: வாலிப பெண்கள் பதினாறு, பதினேழு வயது தான் இருக்கும், அப்படியே நேரே ஆலயத்திற்கு செல்வார்கள். பழைய பருத்தி துணி வண்டியில், மற்றும் அதுபோல உள்ளதில் உள்ளே நுழைய முற்படுவார்கள். 22. மற்றும் முந்தி ஒரு காலத்தில், இங்கே ஒருவர் எனக்கு காடிலாக் கார் கொடுபத்தற்கு விருப்பபட்டனர். மற்றும் நான் சொன்னேன், "எனக்கு ......அது வேண்டும் என்று நீங்கள் அர்த்தம் கொள்கிறீர்களா?" நான் சொன்னேன், "சகோதரனே உங்களுக்கு அதுபோல ஒன்று இருப்பதை குறித்து நான் சந்தோஷப்படுகிறேன்." ஒருவர் சொன்னார், "நாங்கள் இப்போது தான் ஆவாக் என்பவருக்கு ஒன்று கொடுத்தோம், ஏன் உங்களுக்கு ஒன்று நாங்கள் கொடுக்கலாம் அல்லவா." நான் சொன்னேன், "சகோதரனே, பாருங்கள். நான் ஆர்கன்சாஸ் வழியாக அதை ஓட்டி கொண்டு செல்லுகையில், ஏழை சிறிய பெண்கள் அங்கே பருத்தி சாக்குகளை சுமப்பதால் முதுகு உடைந்து, மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு உண்டு மற்றும் _ மற்றும் சோள உணவை உண்டு, "அதோ சகோதரன் பிரான்ஹாம், காடிலாக் காரை ஓட்டி கொண்டு வீதி வழியாக செல்கிறார் என்று சொல்லவேண்டுமா?" நான் சொன்னேன், "எனக்கு அப்படி வேண்டாம், சகோதரனே அதை செய்வதற்கு என் இரத்தத்தில் அது ஓடவில்லை." இல்லை ஐயா எனக்கு எது தகுதியோ அது கிடைத்தால் போதும். நான் ஒரு சைக்கிள் அல்லது கால் நடையாக அங்கு செல்ல முற்படுவேன். இல்லை, அது சரிதானே, சகோதரனே. ஆனால் அது எல்லாம் இப்போது சரியாகி விட்டது . யாருக்காவது ஒரு காடிலாக் கார் உண்டோ? நான் காடிலாக் காரை வைத்திருப்பதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் அது.....அது உங்களுக்கு தான் பாருங்கள்? எல்லாம் சரி. 23. எப்படியாகிலும், அங்கு கிடக்கும் அந்த ஏழை ஜனங்களிடம் செல்வதற்கு, நான் அந்த ஆம்புலன்ஸ் அருகே சென்றேன், என்னை அங்கு கொண்டு சேர்த்தனர்: நண்பர்களே, நான் பார்த்ததிலேயே, மிகவும் பரிதாபத்திற்குரிய ஒரு காட்சியை கண்டேன். அந்த ஆம்புலன்ஸில் ஒரு வயதான தகப்பனார் இருந்தார். அவருடைய காலில் உள்ள அடிப்பாகம் வெளிய வந்திருந்தது, ஒட்டுப்போட பட்டிருந்தது........ஓ, அவர் என்னுடைய சொந்த தகப்பனாரை, மனதிற்கு கொண்டு வந்தார். அவருடைய பழைய நீல மேல்சட்டை, வெளிறி போய் இருந்தன, எல்லா இடமும் ஒட்டு போடப்பட்டு இருந்தது. அவருடைய கரங்களில் ஒரு பழைய தொப்பி கயிறுகளால் இப்படி பின்னி இருந்தன. அவர் சொன்னார், "ஓ ஆண்டவரே, அவளை எனக்கு திரும்பவும் கொடுத்து விடும், அவளை எனக்கு திரும்பவும் கொடுத்துவிடும், "அவரது கரங்களை இப்படி முறுக்கியவாறு கூறிகொண்டிருந்தார். மற்றும் அந்த ஓட்டுநர் அவருடைய பெயரை சொல்லி அழைத்து, "இதோ சகோதரன் பிரான்ஹாம் இங்கே இருக்கிறார்," என்று சொன்னார். மற்றும் நான் _ நான்........ அவர் "ஓ" என்று சொல்லி, "ஓ சகோதரன் பிரான்ஹாம் அவள் மரித்து விட்டாள், அவள் மரித்துவிட்டாள் "மற்றும் அவர் சொன்னார், "ஓ, அம்மா போய் விட்டாள்," சொல்லி அழ ஆரம்பித்தார். நான் சொன்னேன், "அப்பா என்ன வேண்டும்" மற்றும் நான் பார்த்த போது. அவர் சொன்னார், "அவளை பாரும்." நல்லது, உண்மையிலேயே, அந்த பெண் மரிக்கவில்லை என்று தோன்றிற்று. பாருங்கள், அவள் வாய் திறந்திருந்தது......அவளுடைய பற்கள் எடுக்கப்பட்டு இருந்தது, மற்றும் அவள் பல் கட்டி இருந்தாள்.... அவளுடைய கண்கள் பின் புறமாக சொருகி கலங்கிய சேற்று தண்ணீர் போல் வடிந்துகொண்டு இருந்தது, அவளுடைய நெற்றி இறுகி இருந்தது. இப்போது, ஜனங்கள் மரித்துப்போய் தேவன் அவர்களை ஜீவனுக்குள் கொண்டு வந்ததை நான் பார்த்திருக்கிறேன், எனக்கு நேரம் மட்டும் இருந்தால் அதை பற்றி நான் சாட்சி சொல்லுவேன், ஆனால் நீங்கள் செய்தித்தாள்களிலும் பத்திரிகைகளிலும் அதைப் பற்றி வாசித்தி ருப்பீர்கள், மற்றும் பத்திரங்களை சட்டபூர்வமாக நிருபிப்பவரின் (Notary) முத்திரையும், அதுபோல நிரூபிப்பதற்காக காரியங்களை பார்த்திருப்பீர்கள். நான் மரித்து விட்டதாக சொல்லிய மூன்று மரித்துபோன ஜனங்களை பார்த்திருக்கிறேன், ஆனால் அவர்கள் மீண்டும் இயேசு கிறிஸ்துவனால் ஜீவனுக்குள் வந்ததை பார்த்திருக்கிறேன், அது சரியா. மேலும்.......... 24. ஆனால் எப்படி இருந்தாலும் இந்த காரியத்தில், அந்த பெண் சுயநினைவை இழந்து இருப்பாள். நான் நிச்சயமாக சொல்ல முடியாது .ஆனால் நான் _ நான் அங்கு சென்று அவள் கையை பிடித்தேன். அவள் அசையாமல் இருந்தாள்.......அவளை குலுக்கினேன், அவள் அங்கு படுத்து இருந்தாள்.............மற்றும் நான் சொன்னேன், "உன்னால் _ உன்னால் _ உன்னால் என் சத்தத்தை கேட்க முடிகிறதா?" மற்றும். அவள் வாய் அப்படியே திறந்திருந்தது. படுத்திருந்த, அவள் உடம்பு இருகி இருந்தது. நான் சொன்னேன்." "அப்பா, நாம் _ நாம் ஜெபம் செய்யலாம்" என்று, மற்றும் அவர் சொன்னார்..........நான் சொன்னேன், "தேவனே, இங்கிருக்கும் இந்த ஏழை மனிதனை ஆறுதல்படுத்தும், அவருடைய மனைவி.....,.." அவர் சொன்னார், "ஓ, சகோதரன் பிரன்ஹாம், அவள் மிகவும் இனிமையானவள்" என்று சொன்னார். அவள் _ அவள் ...., நாங்கள் பிள்ளைகளை வளர்த்தோம்" என்று சொன்னார்." நாங்கள் இரண்டு பேரும், மிகவும் வேதனையுடன், அந்த பழைய மண் கட்டிகளை உடைத்து, வாழ்க்கை முழுவதும் பாடுபட்டு வாழ்ந்தோம். "நாங்கள் அவ்வளவு கடினமாக உழைத்ததினால், அவளுக்கு புற்று நோய் வந்தது" மற்றும் அவர் சொன்னார்" அவளுக்கு வியாதி ஏற்பட்டவுடன், நான் _ நான் என்னுடைய தோட்டத்தை விற்று விட்டேன், அவள் சுகமடைவதற்காக நான் எவ்வளவோ முயற்சி செய்தேன்." மற்றும் சொன்னார்" என்னுடைய மாடுகளையும் விற்று விட்டேன்." மற்றும் சொன்னார், "என்னிடம் _ என்னிடம் உள்ள அனைத்தையும் செலவழித்து விட்டேன்." மற்றும் சொன்னார், "மருத்துவரால் இயன்ற வரைக்கும் என்ன செய்ய முடியுமோ, அனைத்தையும் செய்து முடித்துவிட்டனர். ஆனால் அதை நிறுத்த முடியவில்லை." மற்றும் அவர் சொன்னார், "சகோதரன் பிரான்ஹாம், எப்படி நாங்கள் இங்கே வந்தோம் தெரியுமா?" சொன்னார், "அவள் போர்வைகளை தைத்து, உண்டு பண்ணுவாள், அதை விற்றோம்" சொன்னார், மற்றும் _ மற்றும் போன வருடம் அவள் பிளாக் பெர்ரி என்று சொல்லக்கூடிய பழத்தில் செய்த டப்பாவில் அடைக்கப்பட்ட ஜாம் (blackberry canned food), அதை விற்று ஆம்புலன்சுக்கு வாடகை கொடுத்து நூற்று ஐம்பது மைல் கடந்து வந்தோம் என்று சொன்னார், "இப்போது அவள் மரித்து விட்டாள், சகோதரன் பிரன்ஹாம்." நான் சொன்னேன், "நல்லது, அப்பா, அவள் ஒரு கிறிஸ்தவளாக வாழ்ந்தாள்." "ஓ, ஆமாம், சகோதரன் பிரன்ஹாம், அவள் ஒரு கிறிஸ்தவள்." நான், "நல்லது, நீங்கள் அவளை மீண்டும் சந்திப்பீர்கள் என்று சொன்னேன்." 25. நான் "நாம் ஜெபிக்கலாம்" என்று சொன்னேன். மற்றும் நாங்கள் ஜெபிக்க ஆரம்பித்தோம். மற்றும் நான் அப்படி ஜெபித்து கொண்டு இருக்கையில், நான் சொன்னேன், "தேவனாகிய ஆண்டவரே, நீங்கள் வானத்தையும், பூமியையும் உண்டாக்கினீர், உமக்கு எல்லாம் தெரியும். அவருக்கு ஆறுதல் தரவேண்டும் என்று ஜெபிக்கிறேன். நீர் தேவன் அல்லவா. நான் என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை." அந்த நேரத்தில் ஏதோ ஒன்று அசைவதை நான் உணர்ந்தேன். நான் நினைத்தேன், "ஏன் அது மனோதத்துவம், அப்படி நான் நினைத்துக்கொண்டிருந்தேன்." மற்றும் நான் ஜெபித்து கொண்டே இருந்தேன். நான் சொன்னேன் தேவனாகிய கர்த்தாவே, உமக்கு எல்லாம் தெரியும்; எல்லா காரியமும் உமக்கு ஒப்புவிக்கபட்டுவிட்டது." மற்றும் அந்த நேரத்தில் அவளுடைய கரம் என்னுடைய கரத்தை இருக பிடித்து கொண்டது. இப்போது. நல்லது, சாத்தான் சொன்னான், "அது என்னவென்று உனக்கு தெரியுமா?" "அதாவது........அவள் மரித்து கொண்டு இருக்கிறாள்; அவளுடைய நரம்புகள் குதித்து கொண்டு இருக்கிறது. ஆனால் எல்லா நேரமும் அந்த புற்று நோயின் அசைவுகளை நான் உணர்ந்தேன். மற்றும், இப்போது, நான் நினைத்ததற்கு காரணம் என்னவென்று_ தெரியுமா அவள் மரித்ததாக நினைக்கவில்லை, ஏனென்றால் அந்த புற்று நோய் அதோடு சென்றுவிட்டு இருக்கலாம்; ஆனால் அந்த புற்று நோயின் வித்து அங்கேயே இன்னும் இருந்தது. எனக்கு அது தெரியும். சில கணத்திற்குள்ளே புற்று நோய் அழிந்து விட்டது. அதற்கு பிறகு அது அசையவே இல்லை. நான் அவள் கரங்களை பிடித்துகொண்டு ஜெபம் பண்ணிகொண்டே இருந்தேன். கொஞ்சம் நேரம் கழித்து நான் கீழே பார்த்தேன். அவள் என்னுடைய கரங்களை பிழிந்தாள். அது நரம்பு இழுத்தல் அல்ல என்று எனக்கு தெரியும். ஆகையால் அவர் தொடர்ந்து அழுது கொண்டு, ஜெபித்து கொண்டு இருந்தார். நான் அவரை பார்த்தேன். மேலும் நான் அவரை பார்த்து_ கொண்டிருந்த போது, அவர் அழுதுகொண்டே ஜெபம் செய்தார். நான் அவளை கீழே பார்த்தேன், அவள் நெற்றியில் உள்ள தோல் மீண்டும் சுருங்கியது, மேலும் அவள் தன்னுடைய கண்களை இப்படியாக அசைத்தாள். நான் அப்படியே பிரமித்து நின்றுவிட்டேன். அவர் தொடர்ந்து தன்னால் இயன்ற மட்டும், சத்தத்தை உயர்த்தி கூக்குரலிட்டு கொண்டு அழுது அழுது, "தேவனே அவளை திரும்ப எனக்கு கொடுத்து விடும்" என்று கதறினார். மற்றும் அவள் அப்படியே பார்த்து, "நீங்கள் யார்?" என்று கேட்டாள். நான் "நான் சகோதரன் பிரன்ஹாம்" என்று சொன்னேன். அந்த நேரத்தில் அவர் மேலே பார்த்தார், மற்றும் அவர் அதை கேட்டார். மேலும் அவர் வேதனையோடு பார்த்து, "அம்மா, அம்மா, அம்மா" என்று கதறி அவளை அப்படியே கரங்களில் அனைத்து கொண்டு, கத்த ஆரம்பித்தார். சரியாக ஒரு வருடம் கழித்து, டெக்ஸாசில், என்னுடைய வானொலி நிகழ்ச்சிகளில் ஒன்றில் அவள், சாட்சி கொடுத்துக் கொண்டு இருந்தாள். 26. நல்லது நான் "நல்லது, நான் இப்பொழுது, எனது காருக்குள் செல்ல போறேன்." என்று நான் சொன்னேன். மற்றும் அந்த மனிதன் சொன்னான், "ஐயா இங்கு இரண்டு ஆயிரம் ஜனங்கள் இந்த இடத்திலிருந்து கதவு வரைக்கும், நெருக்கி இருகிறார்கள்" என்று சொன்னார், "நீங்கள் திரும்பி வர வேண்டியிருந்தால் உங்களால் திரும்பிச் செல்ல முடியாது" என்று கூறினார். "இப்போது இங்கே பாருங்கள், உங்களை இங்கே கொண்டு வந்த ஜனங்கள். "ஆர்களை பின் பக்கமாக ஒரு பெரிய கூட்டமாக நிறுத்தி வைத்துள்ளேன் என்று சொன்னார், அது எங்கே இருக்கிறது என்று தெரியுமா, அந்த இடத்திற்கு பின்புறமாக இருக்கிறது. மற்றும் அவர் சொன்னார் "இப்போது அங்கு பின்னாலே நின்று கொண்டிருக்கும் அவர்களுக்கு, நீங்கள் யார் என்று ஒருவருக்கும் தெரியாது." சொன்னார், "நீங்கள் இந்த வழியாக வரிசையாக, நிறுத்தப்பட்டிருக்கும் அந்த ஆம்புலன்சுகளுக்குள், சென்று பின் புறமாக வாரும். அங்கே சுற்றி வரும் போது அந்த ஜன கூட்டதிற்கு பின்னால் ஒரு சந்து இருக்கிறது, அப்புறம் அந்த இடத்திற்கு நீங்கள் வருவீர்கள், அனு விளக்குகள் வைத்திருக்கின்றனர். "நீங்கள் மேலே, அந்த மூலைக்கு செல்லுங்கள், அவர்கள் அந்த ஜனங்களுக்குள் வழியை திருப்ப முயற்சிக்கிறார்கள்." மற்றும் நான் சொன்னேன், "நான் வெளியே சென்றதை அவர்கள் பார்த்தார்கள் அல்லவா." அவர் சொன்னார், "நான் அணிந்திருக்கும் என் கோட்டை வெளியே எடுத்து, கதவோடு இப்படி பிடித்து கொள்கிறேன், ஆகையால் அவர்களுக்கு தெரியாது." இப்போ அதை பார்ப்பதற்கு கேவலமாக இருக்கும். ஆனால் நான் இருக்கைக்கு மேலே ஏறி, முன் பக்கமாக சென்று அந்த வரிசையாக நிறுத்தி வைத்திருக்கும் ஆம்புலன்சுக்குள் சென்று மேலே வந்து உள்ளே சென்றேன். மேலும் ஜனங்களை இப்படியும், ஆப்படியுமாக தள்ளிக்கொண்டு (உங்களுக்கு தெரியுமா) உள்ளே சென்றேன். அங்கு மழை தூறி கொண்டிருந்தது. யாரோ ஒருவர், "நெருக்குவதை நிறுத்துங்கள்" என்றார். நான் சொன்னேன், "ஆமாம், என்னை மன்னிக்கவும்." நான் நெருக்கிகொண்டே சென்றேன், அவர்களுக்குள்ளாக அப்படியே சென்றேன். யாரோ ஒருவர் சொன்னார், "கீழே உட்காரவும்." நானோ சென்று கொண்டே இருந்தேன் (உங்களுக்கு தெரியுமா?), எல்லோரும்......... சிறிது நேரம் கழித்து நான் ஒரு பெரிய பெரிய வழக்கமான ஆர்கன்சாஸருக்கு எதிராக தள்ளினேன். "எக்ஸ்க்யூஸ் மீ." ஆஹா. இவ்வாறு அவர் கூறினார். நான் அவனுக்கு விரோதமாய்த் தள்ளினேன்; கத்தியால் குத்திக்கொண்டு நிற்கிறான். நானும்... யாரோ என்னை அவர் மீது பாய்ந்தார்கள். நான் சொன்னேன்... அவர், "இறங்குங்கள்" என்றார். மேலும் சிறிது நேரம் கழித்து நான் ஒரு பெரிய நிஜமான ஆர்கன்சாவர்களை நெருங்கினேன். "என்னை மன்னிக்கவும்." ஆஹா. மற்றும் அவர் சொன்னார். அவரை நன்றாக தள்ளினேன்; அவர் சிணுங்கி கொண்டு ஒரு கத்தியைவைத்து கொண்டு நின்றார் . மற்றும் என்னை...........யாரோ ஒருவர் அவரோடு சேர்ந்து நெருக்கிவிட்டார். நான் சொன்னேன் ......அவர் சொன்னார், "கீழே உட்காரும்." மற்றும் நான் சொன்னேன்...........அவர் என்னை உட்கார வைத்து விடுவாரோ என்று பயந்து.......நான் சொன்னேன், "மன்னிக்கவும் ஐயா, நான் அதை வேண்டும் என்றே செய்யவில்லை." அப்படி தள்ளுவது நல்லதல்ல என்று உமக்கு தெரியாதா? என்று சொன்னார். நான் சொன்னேன், "ஆமாம் ஐயா, எனக்குத் தெரியும், ஆனால் என்னை மன்னிக்கவும்." அவன் திரும்பி சிணுங்கிக் கொண்டே இருந்தான், "நான் சொல்லியும் ........." ( உங்களுக்கு தெரியுமா?) இப்படி பேசிக்கொண்டே இருந்தான். மற்றும் நான் நினைத்தேன், "நல்லது." 27. அதன் பின்பு நான் அவரை கொஞ்சம் கவனித்தேன். (உங்களுக்கு தெரியுமா?) கொஞ்சம் நேரம் கழித்து, யாரோ ஒருவர், "அப்பா! அப்பா!" என்று வேதனையோடு கூப்பிட்டத்தை கேட்டேன். நான் நினைத்தேன், "அது எங்கிருந்து வருகிறது?" நான் கீழே கூட்டத்திலிருந்து வருகிறதோ, என்று பார்த்தேன். இப்போது ஜிம் குரோவ் சட்டம் (Jim Crowe law) அர்கான்சாசில் அமுலில் இருந்தது: வெள்ளையர்களோடு கருப்பினத்தவரின் பிரிவினை இருந்தது. ஆகையால் உங்களுக்கு அது என்னவென்று தெரியும். ஆகையால் ,அதன் பின்பு.....கீழே பார்த்த போது, அந்த ஜனங்கள் மத்தியில் ஒரு கறுப்பின பெண் ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். அவள் ஒரு வாலிப பெண்ணாக இருந்தாள், நன்றாக உடுத்தி இருந்தாள். அவள் முற்றிலும் குருடாக இருந்தாள். அவள் கண்கள் என் மேல் சட்டையை போல வெண்மையாக, கண் புரை (cataract) மூடியிருந்தது. மற்றும் அவள் அப்படியே "அப்பா! அப்பா!" என்று வேதனையோடு தள்ளிக்கொண்டு வந்தாள். யாரும் அவளை கண்டுகொள்ளவில்லை. நல்லது, நான் நினைத்தேன், "அந்த பரிதாபமான பெண்." மற்றும் நான் நினைத்தேன், "என்னால்-என்னால் முடியும், என்னால் அவளுக்கு ஏதாவது செய்ய முடியும் என்றால். மற்றும் நான் சுற்றி பார்த்தேன்; ஆண்களைப் பார்க்க முடியவில்லை. அவர்கள் அந்த கட்டிடத்திற்கு வர, இன்னும் அந்த மூலையில் கூட வரவில்லை. ஆகையால் நான்..........அது ஒரு பெரிய கூட்டமாக இருந்தது, அந்த. வழி இதை விட பெரிதாக இருந்தது. சரியாக பாதி தொகுதி, பின்னால் பட்டணத்தின் தொகுதி இருந்தது. ஆகையால், நான் _ நான் அங்கு நின்றுக்கொண்டு கவனித்தேன். மற்றும் அவள் இந்த வழியாக எல்லோரையும் நெருக்கி கொண்டு, இடித்து கொண்டு, என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி "அப்பா! ஓ அப்பா! எங்கே இருக்கிறீர்கள்?" என்று வேதனையோடு உரத்த சத்தமாக கூப்பிட்டு கொண்டு வந்தாள். ஆகையால், நான் அப்படியே சாய்ந்தேன். அதை பார்ப்பதற்கு ஒரு விதமாக........ 28. இப்போது நீங்கள்.....இப்போது இது முடியும் வரை கொஞ்சம் நில்லுங்கள்.,' ஏனென்றால் இதை செய்வதால் நான் ஒரு மாய்மாலக்காரன் என்று நினைத்துக் கொள்வீர்கள். ஆகையால் நான் அந்த வரிசைக்கு நேரே சென்றுவிட்டேன். அவள் அந்த வழியாக செல்லும்போது, நான் இந்த வழியாக செல்லும்போது, அவள் என் மீது இடித்து விட்டாள். ஏதோ ஒன்று நீ அங்கு செல் என்றது. மேலும் அவள் என்னை இடித்து, "என்னை மன்னிக்கவும்" என்று சொன்னாள். நான், "சொல்லுங்கள் அம்மையாரே" என்று சொன்னேன் அவள், "அப்பா!" என்று சொன்னாள். நான், "உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன்? யாரை நீங்கள் கூப்பிட்டு கொண்டு இருக்கிறீர்கள்?" அவள் சொன்னாள், "ஷா" (அது தென் தேசத்தவர்களின் பேச்சு. உங்களுக்கு தெரியுமா); அவள் சொன்னாள், "ஷா, எனக்கு எனது அப்பா வேண்டும். எனக்கு அவரை கண்டு பிடிக்க முடியவில்லை." என்று சொன்னாள், "எனக்கு _ எனக்கு யாரிடம் கேட்பது.......என்று தெரியவில்லை, ஒருவரும் எனக்கு உதவி செய்ய மாட்டார்கள்." நான், "எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன்." அவள், "மெம்பிஸைச்சிலிருந்து வருகிறேன் என்று சொன்னாள்." அது என்பது மைல்களுக்கு அப்பால் உள்ளது. அந்த வண்டிகளை பார்த்தேன், ஒருவர். "மெம்பிஸ்" என்று சொன்னார். நான், "நீ இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்?" என்று கேட்டேன். அவள், "நான், இங்கு சுகமளிப்பவரை பார்க்க வந்தேன்." என்று சொன்னாள். "என்ன?" அவளுடைய விசுவாசத்தை பரிசோதிக்க நினைத்து, அது செய்வதற்கு கடுமையாக உள்ளது என்று சொன்னேன். மற்றும் அவள் சொன்னாள், "நான் அந்த சுகமளிப்பவரை பார்க்க வந்தேன்" என்று அவள் சொன்னாள், "அவர்கள் சொன்னார்கள், இது தான் அவருடைய கடைசி இரவு, மேலும் எனக்கு அந்த கட்டிடத்தை நெருங்க கூட முடியவில்லை. என்னுடைய அப்பாவை தொலைத்து விட்டேன். வண்டியிடம் என்னை அழைத்து செல்ல யாருமே இல்லை, மேலும் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இரக்கமுள்ள ஐயா, நீங்கள் எனக்கு உதவி செய்வீர்களா?" என்றாள். நான் சொன்னேன், "உன்னிடம் ஒரு நிமிடம் சில கேள்விகளை கேட்க போகிறேன். நீ சொன்னாய் யாரோ ஒருவரை பார்க்க வந்ததாக, அவர் யார்?" அவள், "அந்த சுகமளிபவரை" என்று சொன்னாள். நான், "அந்த மாதிரியான, காரியங்களை நீ நம்புகிறாயா" என்று சொன்னேன். அவள், "ஆமாம் ஷா" என்று சொன்னாள். பாருங்கள். மற்றும் நான் சொன்னேன்.......இப்போது அவளுக்கு என்னை பார்க்க முடியவில்லை, காரணம் அவள் முழுவதுமாக குருடாக இருந்தாள். மற்றும் நான் கேட்டேன் _ நான், "இதை பற்றி நீ எப்படி கேள்விபட்டாய்?" என்று கேட்டேன். அவள், "ஆம்" என்றாள். அவள், " பாருங்கள், ஷா - ஷா..." அவள் சொன்னாள், "நான் - நான் ஒரு பத்து வயது சிறுமி. என் கண்களில் கண்புரை ஏற்பட்டது. அவை பழுத்தவுடன் அவற்றை வெளியே எடுத்துச் செல்வதாக டாக்டர் என்னிடம் கூறினார். இப்போது, 'பழுத்த' என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், "அவை பழுத்தவுடன், அவர் அவற்றை வெளியே எடுப்பார்" என்று கூறினார். "இப்போது, அவை பழுத்திருக்கின்றன, டாக்டர் சொல்லுகிறார் [சகோதரர் பிரான்ஹாம் இருமுகிறார்] (மன்னிக்கவும்.) அவர் அவற்றை வெளியே எடுத்தால், என் கண்களிலிருந்து ஆப்டிகல் நரம்புகளை வெளியே இழுப்பார். நான் கட்டிடத்திற்குள் சென்று அவரைப் பார்க்கும் வரை நான் ஒருபோதும் குணமடைய முடியாது. 29. அதற்கு நான், "பெண்ணே, இவ்வளவு அருமையான வைத்தியர்களும், மருத்துவ விஞ்ஞானமும் இன்ன காரியங்களும் நமக்குக் கிடைத்த நாட்களில், அந்த வானதூதர் அந்த மனுஷனுக்குத் தோன்றிய கதையை உண்மையென்று நம்புகிறாயா?" என்று கேட்டேன். அவள், "ஆமாம் ஷா" என்று சொன்னாள். மற்றும் நான் சொன்னேன்.......இப்போது அவளுக்கு என்னை பார்க்க முடியவில்லை, காரணம் அவள் முழுவதுமாக குருடாக இருந்தாள். மற்றும் நான் கேட்டேன் _ நான்," இதை பற்றி நீ எப்படி கேள்விபட்டாய்?" என்று கேட்டேன். அவள் சொன்னாள், "இன்று காலையில் வானொலி மூலமாக, ஒரு மனிதன், தான் குருடாக இருப்பதை சாட்சி கொடுத்து கொண்டிருந்தார்." அவர் பத்து வருடமாக அப்படி இருந்ததாகவும் இப்பொழுது அவர் வேதாகமத்தை வசிப்பதாகவும் சாட்சி கூறினார்" என்று அவள் சொன்னாள். மேலும் அவள், "ஐயா நான் பார்வை அடைய அந்த ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் தான் உண்டு" என்று சொன்னாள். மேலும், "அந்த மாதிரியான காரியத்தை நீ நம்புகிறாயா?" என்று நான் கேட்டேன். அவள், "ஐயா, கொஞ்சம் கேளுங்கள், அவர் எங்கு இருக்கிறார் என்று கேட்டாள், அறிந்து அவரிடம் என்னை அழைத்து செல்ல முடியுமா? என்று கேட்டாள்., "நீங்கள் என்னை அவரிடம் அழைத்து சென்றால், அதற்கு பிறகு என்னுடைய அப்பாவை நான் கண்டுபிடுத்து விடுவேன்." ஓஹ என்ன ஒரு விசுவாசம், அது_அது எனக்கு மிகவும் அதிகமாக இருந்தது." அங்கு சென்றால் என்னுடைய அப்பாவை நான் கண்டுபிடித்து விடுவேன். "எதிர்பார்ப்பு. அவள் மட்டும், தேவன் எங்கு அசைவாடிகொண்டு இருக்கிறாரோ அங்கு செல்வாள் என்றால் ஏதோ ஒன்று நடக்க போகிறது. 30. இந்தக் காலையில் அந்தக் குருடனைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். பின்னர் நான் பழைய குருட்டு ஃபேன்னி கிராஸ்பியை நினைத்தேன்: என்னை கடந்து செல்லாதேயும், ஓ அன்பு மீட்பரே என்னுடைய தாழ்மையான அழுகுரலை கேட்டருளும். மற்றவர்களை நீங்கள் அழைக்கும் போது, என்னை கடந்து செல்லாதேயும், என்னுடைய எல்லா ஆறுதலின் நீரூற்றாக இருக்கும் நீங்கள், என் ஜீவனை காட்டிலும் மேலானவர். 31. "அங்கு நின்றுக்கொண்டு இருக்கும் அந்த ஏழை எத்தியோப்பிய பெண் எப்படி முயற்சி.......... செய்திருப்பாள்" என்று நான் சிந்தித்தேன். ஒரு குருடான மனிதனுக்கு பார்வை பெற்றுக்கொள்ளும் போது, ஏன் இவளுக்கு கிடைக்ககூடாது? மற்றும் அவளுக்காக நான் பரிதபித்தேன். நான் சொன்னேன், "பார்; இப்பொழுது உண்மையிலே அமைதியாக இரு, இருப்பாயா? " மற்றும் அவள் சொன்னாள், "ஆகட்டும் ஷா. என்னை உள்ளே அழைத்து செல்வாயா?" மற்றும் நான் சொன்னேன், "இப்பொழுது, ஒரு கணம் பொறுத்து கொள், நாம் பேசிக்கொண்டு இருந்ததை யாரும் அறியவில்லை." நான் சொன்னேன், "உனக்கு ......வேண்டுமா, யாரை பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றாய்." அவள், "அந்த சுகமளிப்பவரை" என்று சொன்னாள். நான் சொன்னேன், "பார் சகோதரன் பிரன்ஹாமை பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறாயா?" அவள், "அவரை தான்" என்று சொன்னாள். நான், "நான் சகோதரன் பிரன்ஹாம்." என்று சொன்னேன், சொன்னாள்........மற்றும் அவள் என்னை இது போல இழுத்து கொண்டு மற்றும்-மற்றும் அவள் சொன்னாள்............நான் சொன்னேன், "பார், என்னை விட்டு விடு. என்னை......" "ஓ, இல்லை, இல்லை, இல்லை." அவள் என்னை இப்படி பிடித்து கொண்டு சொன்னாள். "இல்லை" அவள் சொன்னாள், "நீங்கள் தான், அந்த சுகமளிப்பவர், அல்லவா, அல்லவா?" நான் சொன்னேன், "இல்லை, நான் சகோதரன் பிரன்ஹாம். இயேசு தான் சுகம் தருபவர்" என்றேன். அவள் சொன்னாள், "நல்லது, நீங்கள் _ நீங்கள் _ நீங்கள் தான் அந்த சுகம் பெற்ற மனிதனுக்காக ஜெபித்தவர் அல்லவா...........ஓ......" என்னுடைய மேல் சட்டையின் மார்புற்ற மடிப்பின் மேல் பகுதியை பிடித்து கொண்டே, "நன்றி ஆண்டவரே, நன்றி ஆண்டவரே" என்று சொன்னாள். நான், "பார் பெண்மணி, உன்னுடைய கரங்களை நான் பிடிக்க வேண்டும்" என்று சொன்னேன், ஆனால் அவளுடைய கரங்களை தளர்க்க எந்த வழியும் இல்லை. நான் வெளிப்படையாக அவளுடைய கரங்களை தளர்க்க முடியவில்லை. நான் இப்படி பிடித்து இழுத்தால், அவள் என்னுடைய கோட்டை இழுப்பாள். மேலும், நான் _ நான் மற்றவரின் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை. ஆகையால், அவளுடைய கரங்கள் கிடைத்தவுடன், இப்படியாக இருக பிடித்து கொண்டேன். நான் சொன்னேன் "இப்போது உன் தலையை கவிழ்ந்து ஒன்றுமே _ ஒன்றுமே சொல்லாமல் இரு. அமைதியாக இரு. "பார், ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் ஜனங்கள் இங்கே நெருக்கி கொண்டு வருவார்கள், அப்பொழுது என்னால் உனக்கு ஜெபிக்க முடியாது" என்று நான் சொன்னேன். மற்றும் அவள் சொன்னாள், "நீங்கள் சொல்வது எனக்கு கேட்கின்றது. நீங்கள் சொல்வது எனக்கு கேட்கின்றது." மற்றும் நான் சொன்னேன், "இப்பொழுது உன் தலையை கவிழ்ந்து, இயேசு உனக்கு உன் கண்பார்வையை கொடுக்க போகிறார் என்று விசுவாசி?" என்றேன். அவள் சொன்னாள், "அவர் இப்பொழுதே செய்கிறார் என்று அறிவேன்." 32. ஆகையால், அவள் தலையை இவ்வாறாக கவிழ்ந்து இருந்தாள். மற்றும் நான்........இப்படியாக ஜெபித்தேன், "சர்வ வல்லமையுள்ள பிதாவே, வானத்தையும் பூமியையும் படைத்தவரே, இந்த ஏழை கருப்பின சிறுமியின் ஜெபத்திற்கு மதிப்பு தாரும். "நான் சொன்னேன் "ஆயிரத்து தொளாயிரம் வருடங்களுக்கு முன்பு, அங்கு ஒரு பழைய கரடுமுரடான குருசை சுமந்து கொண்டு, இரத்தம் தோய்ந்த பாதங்களுக்கு உரிமையானவரின் அடிசுவடுகள் எருசலேம் வழியாக இழுத்து சென்று கொண்டிருந்தது... அந்த மலை மேல் ஏறும் போது, அவ்வளவு பெரிய பாரத்தை சுமந்து கொண்டு சென்ற அவருடைய மெலிந்த உடம்பு கீழே விழுந்தது. அவரால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. அவர் உடம்பில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அவர் சிரசின் மேல் முட்களால் ஆன முள் முடி இருந்தது; அவருடைய தோள்கள் தேய்ந்து போய் இருந்தது; அவருடைய முதுகில் இரத்தம் வடிந்து கொண்டு இருந்தது, அவை வாரினால் அடிபட்ட காயங்களானவை. இரத்தம் வீதி வழியாக ஊற்றிகொண்டே சென்றது. அவருடைய மெலிந்த உடம்பு கீழே விழுந்தது. ,ஒரு எத்தியோபியனான சிமியோன் என்ன கறுப்பின மனிதன் வந்து அந்த குருசை தூக்கி கொண்டு சொன்னான், "அவருக்கு உதவ அந்த குருசை நான் சுமக்கிறேன்." நான் சொன்னேன் "அன்புள்ள தேவனே , கர்த்தராகிய இயேசுவே அது உமக்கு நினைவிருக்கும்." நான் சொன்னேன் இதோ உம்முடைய குழந்தைகளில் ஒன்று, முற்றும் இருளில் தடுமாறிக் கொண்டு இருக்கிறாள். மற்றும் இந்த கட்டிடத்திற்கு அருகில் வர நீர் ஏன் என்னை அனுமதித்தீர் என்று நான் அறியவில்லை. ஆனால், ஒரு நீதிமானின் வழிகள் தேவனால் கட்டளையிடப்படும் என்று அவர்கள் கற்பிக்கப்பட்டுள்ளனர். பின்பு தேவனே எனக்கு தெரிந்த வரைக்கும், உம்மிடம் கேட்பதை தவிர ஒன்றுமில்லை. அந்த ஏழை பெண்ணுக்கு அவளுடைய பார்வையை அளிக்குமாறு கேட்கிறேன். அதை அருளி செய்யும் கர்த்தாவே. அவள் கண்கள் மேல் இருந்த கட்டியோ, அல்லது புற்று நோயின் அதிர்வுகளோ, கண் புரை நின்றுவிட்டன. அந்த நாட்களில் எனக்கு தெரிந்த வழி அது மட்டும் தான். உங்களுக்கு தெரியுமா, அது நடந்து கொண்டு இருக்கும் போது மற்றொன்று வரும் என்று, அதை சாட்சியும் சொல்லியிருக்கிறேன். அவள் சுகம் பெற்று விட்டாள் என்று எனக்கு அப்பொழுதே தெரியும். நான் சொன்னேன். "இப்பொழுது, உன் தலையை கவிழ்ந்து இரு." நான் சொன்னேன், "நான் சொல்லும் வரைக்கும் தலையை உயர்த்தாதே. இப்போது உன்னுடைய கண்ணின் விழிகளை இருக மூடிகொள்." அவள் சொன்னாள், "சரி ஷா." "என் கண்களில் நிஜமாக குளிர்ச்சியாக உணருகிறேன்." என்று அவள் சொன்னாள். நான் சொன்னேன், "உன் தலையை கவிழ்ந்தவாரே இரு." நான் கேட்டேன், "இப்போது உன் தலையை நிமிர்ந்து, நான் எங்கே இருக்கிறேன் என்று பார்க்க எந்த பக்கம் திரும்புவாய்" என்று சொல்லு. அவள் சொன்னாள், "ஆமாம் ஷா" அது வலது பக்கமாக" என்றாள். மற்றும் நான், "அது வலது பக்கமாக தான்" என்றேன், "இப்போது கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உன் பார்வையை பெற்று கொள். உன் கண்களை திற." அவள், "அது வெளிச்சம் தானே?" என்று சொன்னாள். மற்றும் நான், "ஆம்" என்றேன். சொன்னாள், "என்னை கடந்து செல்கின்ற அந்த கருபுள்ளிகள் _ என்ன? "அது ஜனங்களா? " என்று கேட்டாள். "ஆமாம்" என்று நான் சொன்னேன். அவள் சொன்னாள், "ஓ, தேவனே முன்பு குருடாக இருந்த நான் இப்போது பார்க்கிறேன். ஓ என்ன சொல்வேன், அந்த சுற்று வட்டாரத்தில் உள்ள முழு நகரத்தையும், அவள் கவர்ந்து கொண்டாள். அவள் உரத்த சத்தமாக கத்தி ஆகாயத்தில் குதித்தாள். 33. மேலும் அந்த நேரத்தில், அந்த மனிதன் அந்த மூலைக்கு சென்றிருப்பாரோ என்று பார்க்க நான் உள்ளே சென்றேன். அங்கே ஒரு வயதான மனிதன் நின்று கொண்டிருந்ததை பார்த்தேன். அவருடைய பாதம் ஒரு பாயால் சுற்றப்பட்டு இருந்தது. ஒரு கம்பு ஒன்றை பிடித்து கொண்டு படுத்துகொண்டு இருந்தார். அவர் சொன்னார், "சகோதரன் பிரன்ஹாமே நான் எட்டு நாட்களாக இந்த மழையில் நின்றுகொண்டு இருக்கிறேன்" என்று சொன்னார், அதில் இரண்டு நாட்கள் உட்கார்ந்து கொண்டு காத்திருந்ததினால் ஒன்றுமே சாப்பிடவில்லை. எதிர்பார்ப்புகள். நான் கேட்டேன், "நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?" அவர் சொன்னார், "தேவனிடத்தில் கேளுங்கள். கர்த்தர் மீதம் உள்ளதை செய்வார்." நான் சொன்னேன், "இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உங்களிடம் உள்ள கோலை தாருங்கள்." இதோ என் முன்னே என்னுடைய வேதாகமம் இருக்கிறது. நான் நின்று, என் சொந்த கண்களால் இயேசுவை, ஏதோ ஒரு நாளில், பார்ப்பதை எதிர் நோக்கி உள்ளேன். மேலும் அவருடைய கால்கள் இப்படி இருந்ததை நான் பார்த்தேன். அவருக்கு ஒரு கூட்டம் குழந்தைகள் வீட்டில் இருந்தன. அவர் தன்னுடைய பழைய கோலை இப்படி பிடித்திருந்ததார். அவர் சொன்னார், "ஆமாம் ஐயா" மற்றும் அந்த.......என்னிடம் கொடுத்தார். அவர் அந்த விதமாக கொடுக்கும் போது.........அவருடைய கால்கள் ........அவர் இப்படியாக ஆகாயத்தில் குதித்து, உரத்த சத்தமாக கூக்குரல் இட்டு, தன்னுடைய கரங்களை மேலே இப்படியாக உயர்த்தி கூச்சலிட்டு கொண்டு இருந்தார். மேலும், அந்த மனிதர்கள் என்னிடம் வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்ததை பார்த்து, எல்லா திசைகளிலும் இருந்து, எல்லோரும் ஒன்று கூடி ஓடி வருவதை பார்த்து, நான் அதை எளிதாக்க முற்பட்டேன். மேலும், நண்பர்கள், மக்கள் வருவதற்கு முயற்சி செய்து, குழந்தைகளை இவ்விதமாக மேலே தூக்கி கொண்டு, என்னை தொடுவதற்காகிலும் அல்லது வேறே ஏதாகிலும் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தனர்: விசுவாசம், விசுவாசம், எதிர்பார்ப்புகள். அவர்கள் நம்பினார்கள். 34. மற்றும் கேளுங்கள், இது ஒரு பாவம் அல்ல. அந்த நேரம் வரைக்கும் எனக்கு _ ஒரு சூட் போட கூட துணி இல்லை. அவர்கள் எனக்காக காணிக்கை எடுப்பதற்கு நான் அனுமதிக்கவில்லை. அது சரிதானே. நான்......நான் தபால் மூலம் ஜனங்கள் அனுப்பும் காணிக்கையை கொண்டு வாழ்ந்து கொண்டு இருந்தேன். மேலும், எனக்கிருந்த ஒரே ஒரு சகோதரன், மன நலம் சிதைந்து போனபோது ஒரு பழைய ஊதா நிறம் கொண்ட ஒரு கோட்டை அணிந்திருந்தார். ஆர்கன்சாஸ் ஜனங்களாகிய உங்களுக்கு அதை பற்றி தெரியும். நான் அதை அணிந்திருந்தேன், கோட்டு ஒரு விதமாகவும், கால்சட்டை வேறொரு விதமாகவும் இருந்தது. கால் சட்டைகள்.......முதலாவது நாங்கள் வெளியே போக புறப்பட்டபோது, அவருக்கு மனநலம் சரியில்லாமல் போனது. வண்டிக்குள் இருக்கும் போதே அவர் அந்த பாக்கெட்டை இப்படி கிழித்து _ கீழ் வரைக்கும் இப்படியாக வெட்டி போட்டார். இரண்டு மூன்று இடங்களில் அப்படி செய்தார். நானும் என் மனைவியும் பத்து சென்ட் கடைக்கு சென்று, அந்த கிழிந்த இடங்களில் எல்லாம் ஒட்டு போட்டு தைத்தோம். (உங்களுக்கு தெரியுமா?) பின் அதை இஸ்திரிபெட்டி வைத்து முன்னும் பின்னும் இஸ்திரி செய்தோம். ஒரு விதமான ஒட்டு போட்ட ஒன்றாக இருந்தது. மற்றும் அந்த விதமாக தான் ஒட்டு போட்டோம். மேலும் இந்த கோட் பாக்கெட்டை ஒரு ஊசி நூலை கொண்டு தைத்தோம். மற்றும் நான் ஒரு நல்ல தையக்காரன் கிடையாது. ஆகையால் நான் இப்படி தைத்தேன். 35. மற்றும் அது தான் உண்மை, நான் மற்ற போதகர்களை சந்திக்கும் போது, நிறைய போதகர்கள் வருவார்கள் ஆனால் அவர்களை எனக்கு தெரியாது. மற்றும் அவர்களை சந்திக்கும் போது, அந்த பழைய கிழிந்த கோட்டை குறித்து வெட்கப்படுவேன். என்னுடைய வலது கரத்தை இப்படியாக அந்த கிழிந்த இடத்தை மறைத்து கொண்டு, இடது கரத்தால் அவர்களின் கையை குலுக்குவேன், மேலும், "மன்னிக்கவும், எனது இடது கரம் எனது இதயத்திற்கு அருகில் உள்ளதால் இப்படி கைக் குலுக்குகிறேன்" என்று சொல்வேன். காரியம்..........அது அதுவல்ல; அது அந்த பழைய கிழிந்த கோட்டை அவர்கள், பார்க்க கூடாது என்று எண்ணினேன். அது சரியா? ஆனால் சகோதரனே ஒன்று மட்டும் சொல்கிறேன். இந்த எல்லா காரியங்கள் மத்தியில், ஜனங்கள் நெருக்கி கொண்டும், கூட்டமாக வந்து அந்த பழைய கோட்டை தொட்டதால் பரலோகத்தில் தேவன் அவர்களுக்கு சுகம் அருளினார். அவர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால், அந்த கோட்டை தொட்டவுடன் கர்த்தர் அவர்களுக்கு சுகம் தருவார். தேவனை நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் என்றால், அந்த இரவில் அர்கான்சாசில் இருந்த அதே தேவன் இப்போழுது இன்று இங்கே இருக்கிறார். அந்த பழைய கிழிந்த கோட்டுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அது அந்த ஜனங்கள் தேவன் மேல் வைத்த விசுவாசம். தேவன் அசைவாடுவதை அவர்கள் பார்த்தனர், ஆகையால் அதை நம்பினார்கள். நீங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றால் ஒன்றுமே உங்களுக்கு கிடைக்காது. 36. சிமியோன்...............அதற்குள் செல்ல எனக்கு நேரம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் இங்கேயோ அந்த வயதான சிமியோன், இயேசு கிறிஸ்துவை காண்பதற்கு முன்னால் தான் மரிக்க போவதில்லை என்று பரிசுத்த ஆவியினால் வாக்குத்தத்தம் பெற்று இருந்தான். மற்ற ஊழியகார்களின் குழு என்ன சொன்னது என்று அவனுக்கு கவலை இல்லை.; அவன் பரிசுத்த ஆவி என்ன சொன்னதோ அதை அவன் நம்பினான். அங்கே இரண்டு பரிசுத்த ஆவிகள் இல்லை ; ஒன்றே ஒன்று தான் இருந்தது. கிறிஸ்துவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிமியொனிடம் சொன்ன அதே பரிசுத்த ஆவியானவர் தான் உன்னிடம் இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஒரு ஊற்று ஒன்று உண்டு என்று கூறுகிறார். அது சரியா? அதே பரிசுத்த ஆவி தான் சுகம் அளிப்பதற்கு ஒரு ஊற்று திறந்து இருக்கிறது என்று சொல்கிறார். எத்தனை பேர்கள் அந்த ஊற்றிலிருந்து சுகம் கிடைக்கும் என்று நம்புகிறீர்கள்? நாம் பார்கட்டும். கேளுங்கள், தாவீது என்ன சொன்னான் என்று உங்களுக்கு தெரியுமா? "ஆழத்தை ஆழம் கூப்பிடுவது போல........." அந்த நீர் ஊற்றுகள் ஆழமாக இருந்தால் தான்.........இங்கே பாருங்கள், ஒவ்வொரு ஆழமும் இங்கிருந்து கூப்பிடுகையில், ஆழம் அங்கே இருந்தாக வேண்டும். நீங்கள் அதை நம்புகிறீர்களா? இங்கே பாருங்கள். வேறு விதத்தில் சொல்ல போனால், மீன் முதுகில் துடுப்பு இருக்கும் என்றால், நீந்துவதற்காக முதலாவது அங்கே தண்ணீர் இருக்க வேண்டும். இல்லை என்றால் அதற்கு துடுப்பு என்று ஒன்று இருந்திருக்காது? நிச்சயமாக அதற்கு இருக்கும். 37. மற்றும் இங்கே பாருங்கள், ஓர் இரண்டு வருடங்களுக்கு முன்னால், ஒரு குழந்தை பென்சில் எழுத்துக்களை அழிக்கும் ரப்பரை சாப்பிடுவதாக நான் செய்தித்தாள்களில் வாசித்தேன். சைக்கில் சக்கரத்தில் உள்ள ரப்பரை சாப்பிடுவான் என்றும் வாசித்தேன். "குழந்தைக்கு என்ன ஆனது?" என்று அவர்கள் கேட்டார்கள், மருத்துவர் அதை ஆராய்ந்து, இரத்த பரிசோதனைக்கு அனுப்பினார். மேலும் ஆராய்ச்சியில் பார்க்கும் போது, அவனுக்கு கந்தகம் என்னும் பொருள் தேவைபட்டு இருக்கிறது. ரப்பரில் சல்ஃபர் உண்டு. பாருங்கள்? ஆழம் ஆழத்தை நோக்கி கூப்பிடுகிறது. நான் என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? பாருங்கள். அவர்களுக்கு கண்டிப்பா...........ஒரு வேளை ஒரு கந்தகத்திற்கான அழைப்பு இருக்குமென்றால்.......ஒரு வேளை கந்தகத்திற்கான ஒரு அழைப்பு இருக்குமென்றால், கந்தகத்தை அழைக்கிறது, அதற்கு பதிலளிக்க எங்காவது கந்தகம் இருக்க வேண்டும், இல்லையேல் அங்கே கந்தகத்திற்கு அழைப்பே இருக்காது. பாருங்கள். நான் என்ன சொல்கிறேன். ஓ என்ன! எப்படியாக உணருகிறேன்: ஓ நான் பக்தி பரவசம் அடைகிறேன். கேளுங்கள், இப்போது, நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஒரு வேளை ஒரு ஆழம் கூப்பிடுகிறது என்றால்.............சமீப காலத்தில், வெஸ்லியின் மறுமலர்ச்சிக்கு பிற்பாடு, சபையானது, குளிர்ந்த நிலைக்கு திரும்பி பழைய நிலைக்கு திரும்பும் போது, தேவனுக்காக ஜனங்கள் அதிக பசி தாகம் கொள்ள ஆரம்பித்தனர். தேவனுக்காக அதிக பசி தாகம் கொள்ள ஆரம்பிக்கும் போது, தேவன் எங்கேயாவது இருந்து அதிகமாக பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். நீங்கள் வெறும் விசுவாசத்திலினால் நீதிமானாக்கபடுதலில் மட்டும் நம்பிக்கை கொண்டு, பரிசுத்தாவியின் ஞனாஸ்தானம் பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்து , அதற்காக பசிதாகம் கொண்டீர்கள் என்றால், எங்கேயோ ஒரு பரிசுத்த ஆவி இருந்து அந்த பசிதாகத்தை பூர்த்தி செய்யும். அது சரிதானே. மற்றும், இன்று சுகமளிப்பதற்கு என்று ஒரு தேவன் இருக்கிறார் என்று நம்புவீர்கள் என்றால், எங்கேயோ ஒரு இடத்தில் ஒரு ஊற்று, சுகமளிப்பதற்கென்று திறந்திருக்க வேண்டும், அல்லது அந்த விருப்பம் இருந்திருக்காது. வேறு வார்த்தையில் இது போல சொல்வோமென்றால்: ஒரு சிருஷ்டிப்பு இங்கு உண்டாவதற்கு முன்னால், ஒரு சிருஷ்டிகர் அதை சிருஷ்டிக்க கண்டிப்பாக அதற்கு முன் இங்கே இருந்திருக்க வேண்டும். அது சரியா? மற்றும் உங்கள் மேல் இரக்கம் உள்ள ஒரு தேவன், உங்கள் இருதயத்தில், தெய்வீக சுகமளிப்பதற்கென்று பசித்தாகத்தை சிருஷ்டிக்கிறார் என்றால் எங்கோ ஒரு இடத்தில், ஒரு தெய்வம் இரக்கமுள்ளவாராக இருந்து அந்த சிருஷ்டிப்பை சிருஷ்டிக்க வேண்டும். ஆமென். இப்போது அது உண்மை. ஏதோ ஒன்றுக்கு பசித்தாகம் உள்ளவராக இருக்கிறீர்கள்...... 38. நல்லது, இது விசித்திரமாக இல்லையா? சிமியோனை பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் அவனிடம் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார், "நீ கிருஸ்துவை காண்பதற்கு முன்பு, மரணத்தை பார்ப்பதில்லை." ஏன்? அவர்கள் சொன்னார்கள், "தாவீது அவரை காணவேண்டும் என்றிருந்தான், மற்றும் இவன் அவரை காணவேண்டும் என்றிருந்தான், மற்றும் அவன் அவரை காணவேண்டும் என்றிருந்தான்" என்றார்கள், "அவரை எதற்காக காண வேண்டும் என்று இருந்தார்களோ, அது காரியம் அல்ல. பரிசுத்த ஆவியானவர் என்னிடம் சொல்லிவிட்டார். "அவர், அவரை பார்ப்பதற்காக எதிர்பார்த்திருந்தனர். அவர் ஜனங்கள் என்ன சொன்னார்கள் என்பதை பற்றி கவலை கொள்ளவில்லை ; அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இயேசு யூதேயாவில் பெத்லகேமில் பிறந்தபோது, வான சாஸ்திரிகளின் குறுக்கு ஆய்வகங்கள் சில இருந்தன. கண்காணிப்பகத்தில் இருந்தவர்களோ, கோளரங்கமோ யாருமே அதைப் பார்க்கவில்லை. அவர்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவர்கள் ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று என் பைபிள் சொன்னது. நான் அதை நம்புகிறேன். அவர்கள் அதைப் பார்த்தார்கள். அது அவர்களுக்கானது. இன்றைய நாட்களில் தெய்வீக சுகமளிப்பது அவ்விசுவாசிகளுக்காக அல்ல; அது விசுவாசிகளுக்கு மட்டுமே. பரிசுத்த ஆவியின் ஞானஸ்தானம் என்பது அவிசுவாசிகளுக்கு அல்ல, அது விசுவாசி களுக்கு மட்டுமே. இயேசு விசுவாசிகளுக்கு மட்டுமே மரித்தார். அவிசுவாசிகளுக்காக அல்ல; அது விசுவாசிப்பவர்களுகாக மட்டுமே. இயற்கைக்கு மேம்பட்டவர், இயற்கைக்கு மேம்பட்ட மனதை உடையவர்களை பின் தொடருவார். அது சரிதானே பசிதாக முடையவர்கள், கர்த்தருடைய வார்த்தையை வாசித்து, ஒரு எதிர்பார்ப்பை பெரும் போது, அவர் என்ன சொன்னாரோ அதை செய்வார் என்ற எதிர்பார்ப்போடு இருந்தால் கர்த்தர் அதை செய்வார். 39. இதோ இங்கே வருகிறது.........இயேசு பிறந்த அந்த நாளை நான் பார்க்கிறேன். இங்கே சில மேய்ப்பர்கள் வெளியிலே ..........அந்த தூதன் கீழே வருகிறார். அவர்கள் அந்த பெரிய ஆலயத்திற்கு போகவில்லை. தங்களை பிரசித்தம் படுத்திக் கொண்ட மேதாவிகளிடமோ, கல்வி பயின்றவர்களிடமோ D.D பட்டம் பெற்றவர்களி்டமோ அவர்கள் செல்ல வில்லை. அவர்கள் ஆடு மேய்ப்பவர்ளிடமும், பாமர மக்களிடமும் வந்தனர். நான் உரத்த சத்தமாக பேசுவதற்கு மன்னிக்கவும். நான் உணர்ச்சி வசபடவில்லை. நான் எங்கே இருக்கிறேன் என்று எனக்கு தெரியும். ஊஹூம். அது சரி. எனக்கு இருக்கிறது போல உங்களுக்கு இருக்கும் என்றால், நீங்களும் அவ்வாறே செய்வீர்கள். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். இன்றைக்கு தேவனாக இருப்பவர் நேற்றும், இன்றும், என்றும் அப்படியே இருக்கிறார். அவர் மாறுவதில்லை. அவர் தமது ஜனங்கள் மத்தியில் உலாவுகிறார். அவர் இயற்கைக்கு மேம்பட்டவர். அவர் எல்லாவற்றிற்கும் போதுமான தேவன். அவர், ஆபிரஹாம் நூறு வயதாக இருக்கும் போது அவனுக்கு தரிசன மாகி, அவர் சொன்னார், "நான் எல்ஷடாய்." "ஏல் ஷடாய்" என்றால்... "ஏல்" தேவனிடம் இருந்து வருகிறது. "ஷடாய்" என்றால், அது _ அது ஒரு பெண்ணின் மார்பு என்று அர்த்தம் கொள்ளும். வேறு வழியில் சொன்னால், "ஆபிரஹாம், நான் பாலூட்டுபவர். நீ என்னிடம் வரவேண்டும். எனக்கு தெரியும் நீ வயதானவன் என்று, மற்றும் உனக்கு _ உனக்கு இது எப்படி நடக்கும் என்று பார்க்கமுடியாது; ஆனால் நீ என்னுடைய மார்பில் அப்படியே சாய்ந்துக்கொள், மற்றும் நான் அதை எப்படி செய்வேன் என்பதை காண்பிப்பேன். அவர் இன்னும் சர்வ வல்லமை உடையவராக இருக்கிறார். அவர் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனாக இருக்கிறார். மற்றும் நாம் எல்லோரும் ஆபிரகாமின் வித்துக்களாக இருக்கிறோம். கிறிஸ்துவுக்குள் மரித்த நாம் ஆபிரகாமின் வித்துக்கள் ஆகிறோம் . மற்றும் அவருடைய வாக்குத்தத்தின் பிரகாரம், சுதந்திராராக இருக்கிறோம். ஏன் அந்த இயற்கைக்கு மேம்பட்டவரை விசுவாசிக்க கூடாது? ஆமென். கவணியுங்கள். பயப்படாதீர்கள். "ஆமென்" என்றால் , "அப்படியே ஆக கடவது." 40. எல்லாம் சரி. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். சிமியோன், அந்த காலை வேலையில் ஆலயத்தின் பின்புறமாக இருப்பதை, நான் பார்க்கிறேன். இந்த நாளில் இருபது போல் அவர்களுக்கு செய்தியை பரப்புவதற்கான வானொலியோ, நிருபர்களோ, மற்றும் அது போல காரியங்கள், அந்த நாளில் இல்லை. அப்படி இருந்திருக்கும் என்றால், அதை பற்றி ஒன்றுமே தெரிந்திருக்காது. அவர்கள், "ஏதோ ஒரு பைத்தியகாரன் கீழே வந்திருக்கிறான்" என்று சொல்வார்கள். மற்றும், "கீழே ஒரு பெண்ணுக்கு, முறையற்ற குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது, அதினால் இப்போது என்ன?" செய்தித்தாளில் போட்டு விடாதீர்கள், நேரத்தை வீணாக்காதீர்கள். நாம் அரசியலை பற்றி விவாதிக்க வேண்டும்: அடுத்த அரசியல்வாதி யார் அல்லது ஏதோ ஒன்று; அடுத்த முறை ஏரோது தேர்ந்தெடுக்க படுவாரா, இல்லையா" பாருங்கள்? அவர்கள் அதை போட்டு இருக்க மாட்டார்கள். மனிதன் எதை பயித்தியம் என்று கூறுகிறானோ, அதை தேவன் சிறந்தது என்று கூறுகிறார். மனிதன் எதை பயித்தியம் என்று கூறுகிறானோ அதை தேவன் சிறந்தது என்று கூறுகிறார் மற்றும் மனிதன் எதை சிறந்தது.............மாற்று வாசியுங்கள். அது சரியா? தேவனுக்கு எது பயிதியமாக தோன்றுகிறதோ அது மனிதனுக்கு சிறந்ததாக தோன்றுகிறது. தேவனுக்கு எது சிறந்ததாக தோன்றுகிறதோ அது மனிதனுக்கு பயித்தியமாக தோன்றுகிறது. நீங்கள் உலகத்தை விட்டு வெளியே வந்து, இயற்கைக்கு மேம்பட்ட இராஜியதிற்குள் சென்றால் தான் அது புரியும். நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும். 41. இப்பொழுது, பரிசுத்த ஆவியின் உதவியோடு, உங்களுக்கு ஒன்று காண்பிக்க விரும்புகிறேன். மேலும் அது உங்களின் உள்ளான ஆத்துமாவிற்குள் செல்லும் என்று நம்புகிறேன். பாருங்கள் திங்கள் காலையை எடுத்துக்கொள்வோம். அது திங்கட்கிழமை என்று வைத்துக்கொள்வோம். சில எபிரேய குழந்தைகளுக்கு ஒவ்வொரு நேரமும் விருத்தசேதனம் செய்வார்கள்...... அந்த நேரத்தில் பாலஸ்தீனாவில் இருபது லட்சத்திற்கு மேல் யூதர்கள் இருந்தார்கள். எட்டு நாட்களுக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு விருத்த சேதனம் செய்தாகவேண்டும். எட்டாவது நாளில் தாய்க்கு சுத்திகரிப்பு செய்யும்போது, அவர்கள் கண்டிப்பாக குழந்தைகளுக்கு விருத்த சேதனம் செய்தாக வேண்டும். நல்லது, கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்கள், இருபத்து நான்கு மணி நேரத்தில் எவ்வளவு குழந்தைகள் பிறந்திருப்பார்கள். ஒவ்வொரு நாளும் குழந்தைகளை விறுத்தசேதனம் செய்வதற்கும், தங்களுடைய சுத்திகரிப்புக்கும், நீண்ட வரிசையில் பெண்கள் நின்றுக் கொண்டிருந்திருப்பார்கள். அது சரிதானா............ ஒரு சாதாரண பணக்கார மனுஷன், ஒரு குறைபாடு இல்லாத ஆண் ஆட்டுக்குட்டியை காணிக்கையாக கொடுப்பான். ஒரு ஏழை மனிதன் காட்டுபுறாவை காணிக்கையாக கொடுப்பான். இப்பொழுது இங்கே பார்ப்போம். ஒரு நிமிடத்திற்கு இங்கே ஒரு சிறிய நாடகம் நடத்தலாம். ஓ, அவர் அருகில் இருக்கிறார் என்பதை அறிகிறேன். ஓ, எனக்கு மட்டும் ஏதாவது வழியில், இந்த மிக முக்கியமான வேலையில், இப்போது நான் இங்கு நிற்பத்து போல......நான் மட்டும் இப்போது என்ன நினைக்கிறேன் என்பதையும், உங்களுக்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை உங்களுக்கு மாற்றுவேன் என்றால், இந்த கட்டிடத்தில் ஒரு நோயாளி கூட, அல்லது இரட்சிக்கப்படாத ஒரு நபர் கூட இங்கே இருக்கமாட்டான் . அதை செய்ய நான் வாஞ்சிக்கிறேன், ஆனால் அது என்னுடைய வல்லமையில் இல்லை. ஓ என்ன, அவருடைய இறக்கைகள் எப்படியாக விரிந்திருக்கிறது. 42. சிமியோனை பாருங்கள். தூரத்திலிருந்து நின்றுகொண்டிருக்கும் அந்த தாய்மார்களின் வரிசையை பார்ப்போம். அங்கே ஒரு இளம் எபிரேய பெண், சுமார் பதினெட்டு வயது இருக்கும் அவள் அங்கு நின்றுகொண்டிருந்தாள், அவள் நாற்பத்தி ஐந்து வயது நிரம்பிய ஒரு மனிதனை மணந்து இருந்தாள். அவள் கன்னியாக தான் இருந்தாள். அவள் ஒரு சிறு குழந்தையை கந்தை துணிகளால் சுற்றி கையில் ஏந்திக்கொண்டு நின்றாள். அது தான் ஒரு காளையின் பின்னால் உள்ள நுகதடியில் இருந்து எடுக்கப்பட்டதாக இருந்தது. அந்த கொட்டகையில் அதை தொங்க விடுவர். அது தான் என்று அவர்கள் கோருகின்றனர். மேலும் அவரை அதில் சுற்றி இருந்தனர்: துணிகள் இல்லை இருந்த போதிலும் அவரே மகிமையின் ராஜா. அவள் முகத்திற்கு ஒரு அவசொல் இருந்தது, "அவள் ஒரு _ பரிசுத்தம் இல்லாமல் வாழ்ந்த ஒரு பெண், மற்றும் இந்த குழந்தை பரிசுத்த விவாகத்தினால் பிறந்ததாம்" அப்படியாக உலகம் பேசியது. ஆனால் அவளுக்கோ, அது யாருடைய குழந்தை என்று தெரியும். மற்றும் இதோ இங்கே இந்த காலையில் அவள் குழந்தையை கைகளிலேந்தி, நாட்டுப்புற மக்கள் அளிக்கும் ஒரு சிறிய காட்டு புறாவை காணிக்கையாக கொண்டிருக்கிறாள். அந்த சிறு குழந்தையை, முக திரை மூலமாக பார்த்துகொண்டு இருக்கிறாள். வேறொரு பெண் சொல்கிறாள், "உனக்கு தெரியுமா? அது ஹம்ப்.......அவள் யார் என்று தெரியுமா. அந்த குழந்தை ஒரு தகப்பன் இல்லாமல் பிறந்தது." பாரு? பின்னே தள்ளி வா; அவள் கிட்ட நெருங்காத பாருங்கள், இதோ அவள் அங்கே தனிமையில் நின்றாள். ஆனால் அவளோ, உண்மையாகவே இயற்கைக்கு மேம்பட்டு பிறந்த ஜனங்கள் போல அநேக வேலைகளில் தனிமையாக நிற்கவேண்டி இருந்தது. ஆனால் உங்களுக்கு தெரியும் என்றால்.......மரியாள் அதை பற்றி கவலைப்படவே இல்லை. அங்கு நடந்து கொண்டிருக்கிற அனைத்துக் காரியங்களும் அவளுக்கு தெரியும். இதோ அவர் இங்கே அந்த வரிசை இன்னும் கொஞ்சம் முன்னேறி செல்லுகிறது. அவர்கள் வேறொரு தாயை கூப்பிடுகிறார்கள்.அவர்கள் காணிக்கையை வாங்குகிறார்கள். ஆசாரியன் அந்த குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வருகிறான். மரியாள் இன்னும் கொஞ்சம் முன்பாக செல்கிறாள். எல்லாம் சரி. 43. இன்னும் கொஞ்சம் அப்பால் ஒரு சிறு காரியத்தை பார்ப்போம். ஜெப அறையில் ஒரு வயதான முனிவர் உட்கார்ந்து கொண்டு இருப்பதை நான் பார்க்கிறேன். அவர் ஒரு சுருள் ஒன்றில் இருந்து வாசித்துக்கொண்டிருந்தார். வெண்மையான முடி தாடி வரைக்கும் தொங்கிக்கொண்டு இருந்தன. தொண்ணூறு வயதை கடந்து காணப்பட்டார். எல்லோரும், "அவருக்கு கொஞ்சம் மூளை கலண்டு விட்டது. (உங்களுக்கு தெரியுமா?) ஏனென்றால் அவர், அவர் கிறிஸ்துவை பார்ப்பேன் என்று சொல்கிறார். இப்படிபட்டதான காரியத்தை உங்களால் நினைக்க தோன்றுகிறதா?" ஆனால் அவரோ அந்த சுருளை வாசித்துகொண்டு அவரை எதிர்பார்த்து கொண்டு இருந்தார்: "நாம் எல்லோரும் ஆடுகளை போல வழி தப்பி திரிந்தோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழபண்ணினார். நாமோ தேவனால் அடிபட்டு, வாதிக்கபட்டு, சிறுமை பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதலினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம். அவர் நோறுக்க பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவர் தழும்புகளால் நாம் குணமாகிரோம். அந்த வயதான ஆசாரியன், தன் கண்களை கசக்குவதை என்னால் பார்க்க முடிகிறது, மீண்டும் திரும்பி பார்க்கிறார். மேலும் அப்படியே..........அவர் எதிர்பார்த்து கொண்டு இருந்தார், அவர் சொன்னார் "இப்போது, பரிசுத்த ஆவியானவரே, இந்த நாட்களில் ஒன்றில் அவரை நான் காண்பேன் என்று என்னிடம் சொன்னீர்களே." மற்றும் அந்த நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் சொன்னார், "சிமியோனே, உன் கால் ஊன்றி நில்." அல்லேலூயா. "என்ன காரியம் கர்த்தாவே?" என்ன ஏதோ நடந்து கொண்டு இருக்கிறது................. "சிமியோன், நீ நடக்க முற்படு, நான் உனக்கு வாக்குதத்தம் பண்ணினேன். நீ ஏதோ ஒன்றை எதிர்பார்த்து கொண்டிருக்கிறாய். நான் உனக்கு ஒன்றை காண்பிக்க போகிறேன். ஏனென்றால் நீ ஏதோ ஒன்றுக்காக எதிர்பார்த்து கொண்டிருக்கிறாய். அது சரிதான். "ஏதோ ஒன்றை நான் உனக்கு காண்பிக்க போகிறேன்......." 44. நல்லது, இதோ அவன் இங்கே நடந்துகொண்டு வருகிறான். எனக்கு எங்கு செல்லவேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் தேவனே நீர், "சற்று நட" என்று சொன்னீர். அவன் ஒரு மக்கள் கூட்டத்திற்குள் இருந்து நடந்து வருவதை பார்க்கிறேன்; அந்த பெண்களின் வரிசையை இடித்துக் கொண்டு, கீழே சென்றதை, எல்லா பெண்களும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவன், குழந்தையை தன் கரங்களில் சுற்றி வைத்து கொண்டு இருந்த அந்த சிறிய பெண் பக்கமாக வந்த போது, அந்த குழந்தையை தூக்கிகொண்டு; அவரை பார்த்து, அவன் சொன்னான், "தேவனே உம்முடைய வார்த்தையின்படி உமது அடியேனை சமாதானத்தோடே போகவிடும். ஏனென்றால் என் கண்கள் இரட்சிப்பை கண்டது." ஏன்? அதை அவன் கண்டு கொண்டான். அவனிடம் வாக்குத்தத்தம் இருந்தது. அல்லேலூயா. பயப்படாதீர்கள். "அல்லேலூயா" என்றால், "கர்த்தரை ஸ்தோத் தரியுங்கள்" மற்றும் நாம் செலுத்தும் எல்லா ஸ்தோத்தரத்திற்கும் அவர் பாத்திரவானாக இருக்கிறார். பாருங்கள், நான் உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன். பாருங்கள். அவன் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடம், தேவனுடைய வாக்குத்தத்தம் இருந்தது. மற்றும் அது வந்தவுடன் அவன் அதை கண்டுக்கொண்டான். அல்லேலூயா. மற்றும் எந்த ஒரு மனிதனோ அல்லது ஒரு மனுஷியோ, தேவனிடம் இருந்து ஒரு வாக்குத்தத்தத்தை பெற்றிருந்தால், அது வரும் போது, அதை கண்டுக்கொள்வார்கள். இந்த கட்டிடத்திற்குள் இப்போது, பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார் என்பதை என்னால் கண்டு கொள்ள முடிகிறது. சுகமளிப்பவராகிய கிறிஸ்து இங்கு இருக்கிறார். என்னால் அவரை கண்டுகொள்ள முடிகிறது. தாவீது சொன்னார், "என் துதியை அறிவிப்பேன்; நான் அவரைப் பணிந்துகொள்ளும்போது என் சத்தத்தை உயர்த்தி அவரைத் துதிப்பேன்; பரிசுத்தவான்களின் சபையிலே அவரைத் தொழுதுகொள்வேன் என்றார். நிச்சயமாக. இங்கே அவர். 45. அவர் கீழே வந்து அந்த குழந்தையை தூக்குவதை யோசித்துப் பார்க்கிறேன். கர்த்தர் அதை வாக்குத்தத்தம் செய்திருந்தார். மற்றும் கர்த்தர் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் வந்தார். அவர் சொன்னார், "இப்பொழுது சிமியோன், நீ அவரை பார்ப்பதற்கு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றாய்; வெளியே வா. நான் அவரை பார்க்க வேண்டும், ஏனென்றால் நீ அவரை பார்க்க வேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிராய். சிமியோன் எதிர்பார்த்து கொண்டிருந்த குழந்தை கிறிஸ்துவை, அவர் தாயின் கரங்களில் பார்ப்பதற்கு நடத்தி சென்ற அதே பரிசுத்த ஆவியானவர், உங்களையும் இந்த நாளில் இங்கே கொண்டு வந்து இருக்கிறார். தெய்வீக சுகமளிப்பதை நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்களா? ஆமென் என்று சொல்லுங்கள். நீங்கள் தெய்வீக சுகமளிப்பதை நம்புகிறீர்களா? சுகம் பெறுவதற்காக எதிர்நோக்கி இருக்கிறீர்களா. நல்லது, தெய்வீக சுகம் அளிப்பத்தாக வாக்குத்தத்தம் செய்த அதே கர்த்தர் இந்த ஊற்றண்டையில் இருக்கிறார். எதிர்நோக்கி இருங்கள்.நம்புங்கள். அடையாளங்களும், அற்புதங்களும்.......... 46. இப்பொழுது அந்த மூலையில் பாருங்கள், நாம் மணக்கண்களில் பார்ப்போம். எனக்கு அந்த மூலையில் அன்னாள் என்னும் ஒரு வயதான பெண் தீர்க்கதரிசி உட்கார்ந்துகொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. அவள் கண் தெரியாதவள் என்று நமக்கு சொல்லப்பட்டு இருக்கிறது. முன்பு ஒரு மனிதனோடு அவள் வாழ்ந்தாள்..........அவள் கன்னி என்று சொல்லப்படுகிறது ஆனால் அவள் ஒரு மனிதனோடு சுமார் ஏழு வருடம் வாழ்தவள். மற்றும் அவன் இறந்து விட்டான். ஆகையால் அவள் ஆலையத்திலேயே தங்கி விட்டாள். ஜனங்களை ஆறுதல் படுத்த ஓயாமல் ஜெபம் செய்துக்கொண்டிருந்தாள். மற்றும் பரிசுத்த ஆவி அவள் மீது தங்கி இருந்தார். பரிசுத்த ஆவி அவள் மேல் இறங்கி சொன்னார். "அன்னாள், இஸ்ரவேலின் ஆருதலுக்காக எதிர்நோக்கி கொண்டு இருகிறாய். எழுந்து நில். "ஓ என்ன, அவள் கண் தெரியாதாவளாய் வருவதை பார்க்கிறேன். பரிசுத்த ஆவியினால் வழி நடத்தபட்டு ஜனங்களுக்கிடையில் நடந்து வருகிறாள். சிமியோன் கரங்களில் குழந்தையை வைத்துகொண்டு இருக்கும் இடத்திற்கு நேரே வந்து, கரங்களை மேலே உயர்த்தி, தேவனை துத்தித்தாள். அவள் அதை எதிர்நோக்கி கொண்டு இருந்தாள். சகோதர, சகோதரிகளே, கிருபையை அளிப்பதற்காகவும், மற்றும் அவர் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களோ அதை இந்த மதிய வேளையில் செய்து உங்களை ஆசிர்வதிப்பதற்காக இங்கே இருக்கிறார். நீங்கள் அதை நம்புகிறீர்களா? இந்த இரவு அவர் நமக்கு ஒரு சிறந்த ஆராதனை தருவார் என்று நம்புகிறீர்களா? என்னுடைய நேரம் கடந்து விட்டது.நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. 47. சர்வ வல்லமையுள்ள தேவனே, ஓ தேவனே இரக்கம் காட்டும், இரக்கம் காட்டும். நான் என்ன சொல்கிறேன் என்று எனக்கு தெரிய வில்லை தேவனே. "இக்கபோத் பெயரை நாட்டின் எல்லா இடத்திலேயும் பார்க்கும் போது என்ன செய்ய முடியும்." நான் உம்மிடம் ஜெபித்ததையும் சொன்னதையும் நினைக்கும் போது, தேவனே எனக்கு வார்த்தைகள் இல்லை. தேவனின் மகிமை நீங்கி போகிறது, மற்றும் அந்த ஜனங்களின், தேவனே..........ஓ தேவனின் கிருஸ்துவே, ஒரு பழைய பாணியிலான, ஒரு துடைத்துக் கொண்டு போகிற கூட்டத்தை தாருங்கள். தேவனே அதை அருளி செய்யும். அதனால், நீர் ஒரு தூதனை அனுப்பினீர் என்று ஜனங்கள் அறிந்து கொள்ளட்டும். அவர் வார்த்தையை உறுதி படுத்துகிறார். அடையாளங்களும், அதிசயங்களும் தொடருகிறது, வேதத்தில் எங்களுக்கு போதித் துள்ளபடி பெரிய காரியங்கள் சென்றுகொண்டிருக்கிறது. "இன்னும் கொஞ்ச நேரத்தில் உலகம் என்னை காணாது. ஆனால் நீங்கள் என்னை காண்பீர்கள்." யார் அந்த நீங்கள். எதிர்நோக்கி கொண்டிருக் கிறவர்கள்." அது உங்களோடு கூட இருக்கும், உங்களுக்குள்ளும், உலகத்தின் முடிவு பரியந்தம் இருக்கும். நீங்கள் சொன்னீர்கள், "இந்த காரியங்களை நான் சுயமாய் செய்யவில்லை ...... நான் என்ன செய்ய வேண்டும் என்பதை என் பிதா, காண்பிக்கிறார்." மற்றும், இதோ நீங்கள் இங்கே, இரவுக்கு பின் இரவு, இரவுக்கு பின் இரவு, பகலுக்கு பின் பகல், இடத்துக்கு பின் இடம், வேலை செய்துகொண்டு, நிரூபித்துக் கொண்டு, உங்களுடைய மகா வல்லமையும், வெளிபாடுகளையும், நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாத அதே கர்த்தர் என்பதை காண்பித்துக் கொண்டு இருக்கிறது. தேவனே ஜனங்களை சீக்கிரமாக எழுப்பும். கர்த்தாவே. நேரம் கடந்துசெல்வதற்கு முன்பே அவர்கள் எழுப்புவார்கள் என்று ஜெபிக்கிறேன். ஓ, நாட்கள் வேகமாக சென்றுகொண்டு இருக்கிறது. மற்றும், ஒரு மனிதனும் வேலை செய்யக்கூடாத இரவு வந்துகொண்டிருக்கிறது. தேவனாகிய கர்த்தாவே, ஒரு பழைய பாணியிலான எழுப்புத்தலின் வல்லமையை இந்த கட்டிடத்திற்குள் இந்த இரவு அனுப்பும், மேலும் ஜனங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படட்டும். பின்வாங்கி போனவர்கள், தேவனுடைய இராஜியத்திற்கு திரும்பி அழைக்கப் படுவார்களாக. அதை அருளி செய்யும் கர்த்தாவே. இந்த இரவு, ஒவ்வொரு கண் பார்வையற்றவரும் பார்வை அடைந்திருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறேன்; ஒவ்வொரு முடவரும் நடப்பார்களாக, ஒவ்வொரு புற்று நோயும் கொல்லபட வேண்டும்; ஒவ்வொரு செவிடரும் கேட்பார்களாக; ஒவ்வொரு ஊமையனும் பேசுவார்களாக. மற்றும் எல்லா காரியமும்..........தேவனுடைய வல்லமை இந்த கூட்டத்தை இராஜியங்களை கடந்து எடுத்துச் செல்லபடட்டும், அங்கே ஜனங்கள், தாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் இருப்பார்கள்; ஆனால் தேவனுடைய வல்லமை ஒவவொருவரையும் குணப்படுத்தும். அதை அருளும் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் கேட்கிறேன். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.